வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, September 20, 2010

தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.

    தவறான மருத்துவப் பதிவுகள் பற்றிய பதிவில், எனது கோபம் தெரிகிறது என நண்பர்கள் கூறி இருந்தனர். அவரது ஒரு பதிவில் தான் முரண்பாடு என நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. இதை பொறுமையாகப் படிக்கவும், நாம் ஏமாற்றப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.  

        அடிப்படை அறிவே இல்லாமல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில், எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction   ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா? இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப் பட்டது. வாழ்நாள் முழுவதும் அரைக் குடலுடன் வாழப் போகும் அந்தக் குழந்தையின் முகத்த்தில் இவர்களால் விழிக்க இயலுமா?

       சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவு இல்லை என்பவர்களே இதை என்ன சொல்வீர்கள்?

          விளக்கெண்ணெயின் பக்க விளைவுகளைப் பற்றி அறிவீர்களா? அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? உப்பில் இருந்து மிளகாய் வரை அனைத்துப் பொருட்களும் பக்க விளைவு கொண்டவை என்பது தெரியுமா?

   ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையின் சுருக்கத் தமிழாக்கம் -  "அறுபது வயது சர்க்கரை நோயாளி சாப்பிடாமல் சர்க்கரை குறை நிலைக்குச் சென்று சுயநினைவின்றி விழுந்துவிட்டார். அவரைக் காப்பற்ற சர்க்கரைக் கரைசலை வாயில் ஊற்றினார் அவரது மனைவி. (சுய நினைவின்றி இருப்பவருக்கு வாய் வழியே எதுவும் கொடுக்க கூடாது என்ற அடிப்படை மருத்துவ அறிவு எத்தனை பேருக்கு தெரியும்?) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது."  இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ? இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே? (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ?)

  உடலில் வியர்வை எப்படி உருவாகிறது என நெட்டில் படிக்கவும் நண்பரே. உடலில் இருந்து வெப்பம் வெளியேற முடியாத நிலையில் வியர்வை உற்பத்தி ஆகி வெப்பத்தை சமன் செய்கிறது. வியர்வையில் எவ்வளவு சோடியம், எவ்வளவு குளோரைடு உள்ளது என அனைத்தும் நெட்டில் கிடைக்கும். அறிவியல் இப்படி இருக்க வாழை இலையை சுற்றிக் கொண்டு படுத்தால் வியர்க்குமாம், கெட்ட நீர் வெளியேறுமாம். கேக்குறவன் கேனையனா இருந்தா வியர்வைல.....வேணாம், விட்ருங்க.   சிமென்ட் சாக்கு தெரியுமா/ அதை கட்டிக் கொண்டு படுத்துப் பாருங்கள். இதைவிட அதிகமாக வேர்க்கும்.

   வியர்வை எப்படி உருவாகும்? வியர்வையில் உள்ள பொருட்கள் என்ன? என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் "கெட்ட நீர் வெளியேறிவிட்டது" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது? இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா? (வெப்பம் கூடினால் சுரப்பி வியர்வையை சுரக்கும், மற்றபடி வாழை இழைக்கும், சிமென்ட் சாக்கிற்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது)

   கரையான்களும், பாம்புகளும் எச்சமிட்ட புற்றுமண்ணை உடலில் பூசினால் இன்பெக்க்ஷன் வராதா? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் காயத்தில் மண் பட்டால் சீழ் பிடிக்காதா?

  இங்கு அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. ஆயிரம் வருடங்களாக இருப்பதாலேயே கேள்விகள் இன்றி ஒத்துக் கொள்ள முடியாது. உடன்கட்டை ஏறுதல் கூட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்தது.

  பால் சாப்பிட்டால் காம எண்ணம் தலை தூக்குமாம், நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி அடிகள் இறுதிவரை பால் தான் சாப்பிட்டார், அவருக்கும் தூக்கிக் கொண்டே இருந்ததோ காம எண்ணம்? உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா? சைவ உணவு உண்பவர்களுக்கு B12 கிடைக்க ஒரே வழி பால் தான். நாசிசம் பாசிசம் போல food faddism ஆபத்தான விஷயம். தெரிந்தோ தெரியாமலோ அதைப் பரப்புகிறீர்கள் நண்பரே. இது போல சொல்லிக் கொண்டே போகலாம் நண்பரே.

  மருத்துவப் பதிவுகளை எழுதுவதும் அவற்றைப் பற்றி கேட்டால், அந்த புத்தகத்தில் போட்டுருக்கு, எனக்கு தெரியாது என பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியான விஷயம் அல்ல நண்பரே. மற்ற உயிரை ம... ராக மதிக்கும் குணம்.

 உண்மையிலேயே இயற்கை மருத்துவத்திற்கு நன்மை செய்ய நினைத்தால், அதை நான்கு பேருக்கு பரப்ப நினைத்தால், மூளை கட்டி குணமானதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள், நோபல் பரிசு வாங்கும் அளவு மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக அது இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்த நோட்டிசை மூவாயிரம் காப்பி பிரிண்ட் செய்த கர்நாடககாரருக்கு தங்கப் புதையல் கிடைத்தது, கிழித்துப் போட்டவர் இரத்தம் கக்கி செத்தார்" என்று வரும் பிட் நோட்டிஸ் போல ஆதாரம் இல்லாமல் ப்ளாக் எழுத வேண்டாம். எப்படி குணம் ஆனது என்று அறிவியல் ரீதியில் விளக்க முயன்றால் அது நல்ல விஷயம். இல்லையென்றால், பிரார்த்தனை கூட்டத்தில் கண் தெரியாதவருக்கு பார்வை கொடுக்கும் முறைக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

   மருத்துவ பதிவு எழுதும் முன், சில விசயங்களை யோசித்துக் கொள்ளுங்கள்,
அ) தாங்கள் கூற வந்தது சரியான கருத்தா?
ஆ) அதில் நம்பகத் தன்மை எவ்வளவு உள்ளது
இ) இதனால் மற்றவருக்கு துன்பம் வருமா?
ஈ) மருத்துவ அறிவு வளருமா?
உ) அதைப் பற்றி சந்தேகம் கேட்டால் நம்மால் விளக்க முடியுமா?
         பதிவை எழுதும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் எழுத வேண்டாம். பரபரப்புக்காக எழுத வேண்டும் என்றால் எந்திரன் பற்றி பதிவு எழுதி விட்டுப் போங்களேன். யாருக்கும் நஷ்டம் இல்லை. உங்களது பதிவால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அந்தப் பாவம் உங்களையே சாரும்.

       பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், யார் என்ன சொன்னாலும் ஆ!!!!!! என்று கேட்காமல் அதன் உண்மை தன்மையை யோசியுங்கள். மருத்துவ சந்தேகங்களைப் பற்றி தகுதியான நபர்களிடம் விளக்கம் பெறவும். படித்தவர்களிடமே மருத்துவ அறியாமை பரவி உள்ள நிலையில் (kidneyக்கும் testisக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளக இருக்க ஊருண்னே இது) கருப்பை எடுத்தால் மாதவிலக்கு வரலாம் என்று காதில் பூ சுத்தலாம், வியர்வையில் கெட்ட நீர் வெளியேறும் என பூமாலையே சுற்றலாம்.

 டிஸ்கி:  இதில் நான் எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ள வார்த்தைகளை நெட்டில் சர்ச் செய்து பாருங்கள். தேவைக்கு அதிகமாகவே விஷயம் கிடைக்கும். 

15 comments:

அருண் பிரசாத் said...

ரைட்டு!

for follow up

Anonymous said...

பயனுள்ள பதிவு நண்பா...

அலைகள் பாலா said...

நன்றி நண்பர்களே

Jey said...

நான் எனது அனுபவத்தை வைத்து ஒரே ஒரு பதிவு “ சிறுனீரகக்கல் தீர்வு” பற்றி எழுதியுள்ளேன். எழுதுவதற்கு முன் நீங்கள் சொன்னதுபோல் யோசித்தபின் தான் எழுதினேன். உங்களின் இந்த பதிவில் அதிக அர்த்தம் உள்ளது. நன்றி

http://pattikattaan.blogspot.com/2010/07/10_20.html

அலைகள் பாலா said...

ஜெய் சார். உங்கள பாத்து எத்தனை நாள் அச்சு? எங்க போய்டிங்க? எப்படி இருக்கீங்க?

அலைகள் பாலா said...

அந்த பதிவ நீங்க போட்ட அன்னைக்கே படிச்சுட்டேன். நல்ல பதிவு.

Chittoor Murugesan said...

பாஸ்.. ரெம்ப விவரமா, பொறுப்பா எழுதியிருக்கிங்க. நானும் மருத்துவம் தொடர்பா இதைப்போலவே சிலது மனசுல நினைச்சிருக்கேன். ஆனால் உங்க பதிவை படிச்சதும் அதையெல்லாம் எழுதலாமா வேணாமான்னு டர் ஆயிருச்சு

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்கள். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அன்றே வள்ளுவர் சொல்லிச் சென்றிருக்கிறார். மலிவான விளம்பரத்திற்காக சிலர் இவ்வாறு செய்கிறார்கள். படிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

அலைகள் பாலா said...

பதிவுக்கு முன் ஒரு சுயபரிசோதனை போதும் நண்பரே

அலைகள் பாலா said...

@DrPKandaswamyPhD said...

நன்றி சார்.

mightymaverick said...

அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு நம்ம முன்னோர்கள் சொல்லி இருக்காங்கப்பா... அளவா எதை சாப்பிட்டாலும் ஒண்ணும் இல்லை... அளவுக்கு மீறி சாப்பிட்டா தான் பிரச்சினை... அதோட, நம்ம உணவு முறை நம் உடம்பில் இருந்து சுரக்கின்ற வியர்வையையும், நம் உடல் இழந்த சக்தியை மீட்டு தர அருமையான உணவு முறை... அதாவது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்தால்... உக்காந்த இடத்தை விட்டு எந்திரிக்காம அதே பழைய உணவு முறையை கடைப்பிடித்தால், எல்லா வியாதியும் வந்து சேந்துக்கும்...

Renga said...

You are RIGHT.....

அலைகள் பாலா said...

thank you friends

thiyaa said...

பயனுள்ள பதிவு

என்னது நானு யாரா? said...

நண்பா! உங்களுக்கு மனிதர்களின் மேல் இருக்கும் அக்கறை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

// எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா?//

இது இயற்கை மருத்துவ சிகிச்சை முறை என்று யார் சொன்னது நண்பா?

கண்டனங்கள் செய்யும் முன்பு, அந்த விஷயத்தை நன்குப் புரிந்துக்கொண்டு உங்களின் கண்டனங்களை எழுதுங்கள். அப்போது தான் உங்களின் வாதத்திற்கு மதிப்பு இருக்கும்.

https://docs.google.com/viewer?url=http://www.soilandhealth.org/02/0201hyglibcat/020160.khune/kuhne.pdf&pli=1

உங்களுக்கு நேரம் இருக்கும்போது இந்த மென்புத்தகத்தைப் படித்துப்பார்த்தப்பின், எது இயற்கை மருத்துவம் என்று அறிந்தப்பின் தாராளமாக உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.

உங்களின் பதிவில் நீங்கள் இயற்கை மருத்துவத்தை சரியாக தெரிந்துக்கொள்ளாமலேயே அதன் மீது கல் எரிகிறீர்களே என்று தான் வருத்தம் :-((

உங்களின் நண்பன்
வசந்த்