வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Wednesday, September 22, 2010

இன்டர்மீடியேட் வயசு

   


        இங்கு வந்து சேர்ந்த புதிதில் நெல்லூர் என்னை இவ்வளவு மயக்கும் என எதிர் பார்க்கவே இல்லை. அப்பாவிற்கு ஆந்திராவில் வங்கிப் பணி. கடப்பாவிற்கு அருகே ஒரு சிறு நகரத்தில் அப்போது இருந்தோம். அதை நகரம் என்று சொல்ல முடியாது. முழுவதும் பூசப் படாத வீடுகள், புழுதி பறக்கும் சாலைகள், எப்போதாவது வந்து செல்லும் ஓட்டை நகரப் பேருந்துகள், அழுக்கு படிந்த எனது பள்ளி தவிர வேறு எதையும் அறிந்தது இல்லை. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திடீரென்று ஒருநாள்  "இன்டர்மீடியேட் படிக்க நெல்லூர் போறியா?" என கேட்டார்கள். நண்பர்கள் நெல்லூர் பற்றி மிகக் கவர்ச்சியான பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.அந்தக் கனவுகளோடு உடனே சரி சொன்னேன்.

   இன்டர்மீடியேட் என்பது நம்ம ஊரில் +1, +2 போல. இரண்டு வருடம் படிக்க வேண்டும். அதன் பிறகு தான் கல்லூரியில் சேர முடியும். நம்ம ஊரில் ஈரோடு, சேலம் மாவட்டங்கள் பள்ளிகளுக்கு எப்படி புகழ் பெற்றவையோ அது போல ஆந்திராவில் நெல்லூர். வசதி இருப்பவர்கள் ஹைதராபாத் செல்வார்கள்.

     ஆனால் நெல்லூர் வந்து சேர்ந்த பின் அதன் பிரம்மாண்டம் என்னை மிரட்டியது. யாரிடமும் பேசக் கூட பயமாக இருந்தது.  முதல் மூன்று மாதங்களில் பலமுறை யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு ஓட முயற்சி செய்தேன். தனியாக போக பயமாக இருந்ததால் முயற்சி கைவிடப் பட்டது.


     அங்கு விடுதிகள் வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் மாணவர்களை தங்க வைத்து விடுவர். தெருவின் கடைசியில் இருக்கும் வீடுகளை மொத்தமாக பிடித்து, அதில் மாணவிகள். அங்கு மட்டும் ஒரு காவலாளி இருப்பார். நான் இருந்த வீட்டில் மொத்தம் எட்டு பேர். முதல் நாள் பற்பசை கடனாக கேட்ட நண்பனுக்கு முறைத்துக் கொண்டே கொடுத்து விட்டு அதை வாங்கி திரும்ப பெட்டியில் பூட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இரண்டு வருடம் முடியும் போது எட்டு பேருக்கும் ஒரே சோப்பு தான் என்பது வேறு விஷயம்.

  வந்த புதிதில் மறுநாளே தேர்வு இருப்பது போல வகுப்பு விட்டு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து விடுவேன். யாரிடமும் பேச கூச்சமாக இருக்கும். என் அறையில் இருக்கும் மற்றவர்களும் என்னிடம் அவ்வளவாக என்னிடம் பேச மாட்டார்கள். அவர்களுக்குள் நன்றாக பேசிக் கொள்வர். ஆனால் அது எல்லாம் மூன்று மாதம் தான். மூன்றாவது மாதம் ஒரு நாள். என் அறையில் ஒருவனுக்கு டைபாய்டு காய்ச்சல். கண் விழிக்க முடியாமல் படுத்துவிட்டான். அறை நண்பர்கள் அவனை கவனித்துக் கொண்ட விதம் என்னை பாதித்தது. வாந்தி எடுத்ததை கூட அருவருப்பின்றி சுத்தம் செய்தனர். இதுவரை வீடு மட்டுமே உலகம், வீட்டில் மட்டுமே பாசம் என்று நினைத்த என்னை இது ஏதோ செய்தது. மனிதர்களின் புதிய பரிமாணங்களை காட்டியது. வீட்டில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றுபவர்கள் என நினைத்திருந்த எனது நினைப்பில் மரண அடி. மெதுவாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். சாமியார் பேச ஆரம்பிக்கிறான் என அவர்களுக்கும் சந்தோசம். அப்படியே மெதுமெதுவாக ஆரம்பித்த நட்பு முஸ்தப்பா முஸ்தப்பா ரேஞ்சுக்கு சென்று விட்டது.  அத்தனை நாள் எடுத்த  சாமியார்  பேரை ஒரே நாளில் மாற்ற வேண்டு என்பது போல சேட்டை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் காய் திருடுவது, வகுப்பை கட் அடித்தி விட்டு திருப்பதி, சென்னை என ஊர் சுற்றுவது, என நட்பின் இலக்கணத்திற்கு உரிய அனைத்தையும் செய்தோம். எங்கள் முயற்சி வீண் போக வில்லை. வெகு சீக்கிரத்தில் அந்த வீட்டு பசங்களா? உருப்புடாத பசங்க என்ற நல்ல பெயர் வந்து சேர்ந்தது. நண்பனுக்காக லோக்கல் நெல்லூர் வாலிபர்களிடம் சண்டைக்கு போய் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது இதில் மகுடம் வைக்கும் நிகழ்வு. 



   இப்படியாக இனிதே முதல் வருடம் நிறைவுற்றது. இரண்டாம் வருடம் வந்து விட்டோம். முதல் வருடம் வேறு மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். மொழிப் பாடங்களில் இருவருக்கும் சேர்ந்தே வகுப்பு நடக்கும். எங்கள் கோஷ்டியைப் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் எங்களிடம் பயத்துடனே ஜூனியர்கள் பழகுவார்கள். நாங்கள் முதல் பெஞ்சில் தான் அமர்வோம். வகுப்பை கவனிக்க அல்ல. டீச்சருக்கு டார்ச்சர் கொடுக்க. அது போல வகுப்பை விட்டு வெளியேறும் போதும் கடைசி பெஞ்ச்சை விட முதல் பெஞ்ச் தான் எளிது.

    அன்றும் அப்படி முதல் பெஞ்சில் உக்காந்து இருந்த போது தான் அவள் வந்தாள். முதலில் பார்க்கும் போது பல்பு லாம் எரியவில்லை. ஆனால் அது தான் நான் வாங்கப் போகும் முதல் பல்பு என அப்போது தெரியவில்லை. தொடர்ச்சி அடுத்த பாகம்.....

  டிஸ்கி: பதிவுலகில் நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று, அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்களது எழுத்து. அவரது தீராக் காதல் பாதிப்பில் உருவான புனைவு இது.  இன்ஸ்பிரேஷன் என நான் சொல்லிக் கொண்டாலும் காப்பி காப்பி என யாரோ கத்துவது காதில் கேட்கிறது. பதிவுல இதுலாம் சாதாரணம்பா.

7 comments:

*இயற்கை ராஜி* said...

mm.. nalla iruku inga kathai

அருண் பிரசாத் said...

பாக போதுந்தி... கண்டிநியூ செய்யண்டி.... மா பிலாக்லயும் ஆந்திரா டிராவல் மேட்டர் உந்தி, ஒச்சி சூடண்டி


- இதுக்கு மேல தெலுங்கு வராது எனக்கு...

thiyaa said...

என்ன கொடுமைசார் இது

அலைகள் பாலா said...

அனைவருக்கும் நன்றி. நண்பேன் டா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முதலில் பார்க்கும் போது பல்பு லாம் எரியவில்லை//

appo kovil mani adichadho...ha ha ..just kidding..

okay okay..super start... seekaram podunga

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆந்திரா போஸ்ட் தெலுகுல இல்ல போடணும்...திஸ் இஸ் டூ bad ... நேன் செப்பேதி ஏமண்டே மீரு தெலுகுலோ போஸ்ட் சேஸ்தே சால பாக உண்ட்டுந்தி... (ஹி ஹி ஹி)

Anonymous said...

என்ன ஒரு அருமையான பதிவு..ரொம்ப நல்லாருக்குங்க..தெளிவான நடை.நெல்லூர் சாப்பாடு பற்றி அடுத்த பதிவு போடுங்க செம ஹிட் ஆகும்