வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Monday, November 22, 2010

கனவுகள் பேசும் நேரமிது..... நன்றி எஸ்.கே

  சென்ற பதிவில் எனது கனவிற்கு அருமையான விளக்கம் தந்து வழக்கம் போலவே அசத்தி விட்டார் நண்பர் எஸ்.கே. அவரது விளக்கம்.,  பச்சை புல்வெளி கனவில் வருவது எப்போதும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான இடத்தில் இருப்பதை/இருக்க விரும்புவதை குறிக்கிறது. மேலும் புதிய வளர்ச்சி மற்றும் வெற்றியை குறிக்கிறது. இக்கனவில் ஒரு விளையாட்டு போட்டியின் சூழல் நிலவுகிறது. இது உயர்ந்தபட்ச வெற்றியை நீங்கள் அடைய விரும்புவதை குறிக்கிறது. கனவில் கேட்கும் குரல்- உங்கள் ஆழ்மனம் உங்களை முன்னேற சொல்கிறது. நீங்கள் ஒரு அதிகமான வெற்றியை பெற விரும்புகிறீர்கள். ஒரு கட்டத்தில் உயரம் போதுமென நீங்கள் தரைக்கு வருகிறீர்கள். அதாவது அதுவே உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்கள். இக்கனவு பல வருடங்களாக வருவதால் அது இன்னும் நிகவில்லை என்பது தெரிகிறது.மேலும் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றங்களை விரும்புவதையும் இக்கனவு குறிக்கிறது. அம்மாற்றங்கள் நீங்கள் விரும்பியபடி இதுவரை முழுமையாக நடக்கவில்லை என தெரிகிறது.


கனவில் நீங்கள் மட்டுமே வருகிறீர்கள் என நினைக்கிறேன். எனவே இக்கனவு முழுமையாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே குறிக்கிறது. ////


  பச்சை புல்வெளி கனவில் வருவது எப்போதும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான இடத்தில் இருப்பதை/இருக்க விரும்புவதை குறிக்கிறது -
                            -ஆம்.     எனக்கு எப்போதும் சந்தோசமாக இருப்பதே பிடிக்கும்.

மேலும் புதிய வளர்ச்சி மற்றும் வெற்றியை குறிக்கிறது. இக்கனவில் ஒரு விளையாட்டு போட்டியின் சூழல் நிலவுகிறது. இது உயர்ந்தபட்ச வெற்றியை நீங்கள் அடைய விரும்புவதை குறிக்கிறது.
                      -ஆம்.  ஒரு மிகப் பெரிய இலக்கை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

  கனவில் கேட்கும் குரல்- உங்கள் ஆழ்மனம் உங்களை முன்னேற சொல்கிறது. நீங்கள் ஒரு அதிகமான வெற்றியை பெற விரும்புகிறீர்கள்.
                      - நிஜம்

ஒரு கட்டத்தில் உயரம் போதுமென நீங்கள் தரைக்கு வருகிறீர்கள். அதாவது அதுவே உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்கள். இக்கனவு பல வருடங்களாக வருவதால் அது இன்னும் நிகவில்லை என்பது தெரிகிறது.

               - ஹா ஹா ஹா. ஆமாம். ஆனால் வாழ்நாளில் கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.

மேலும் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றங்களை விரும்புவதையும் இக்கனவு குறிக்கிறது. அம்மாற்றங்கள் நீங்கள் விரும்பியபடி இதுவரை முழுமையாக நடக்கவில்லை என தெரிகிறது.

                        - இதற்கும் ஆம்.

கனவில் நீங்கள் மட்டுமே வருகிறீர்கள் என நினைக்கிறேன். எனவே இக்கனவு முழுமையாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே குறிக்கிறது.
      - இங்கு விவரித்தலில் ஒரு தவறு செய்துவிட்டேன் நண்பரே. பின்னால் ஒரு நபர் நிற்கிறார். சில நேரங்களில் ஒரு பெண்.  அவர்களை நான் பார்க்கவில்லை. அனால் தெரிந்தவர்கள் போல ஒரு எண்ணம். அவர்களது குரல் மட்டுமே கேட்கிறது.
அவர்களது வயது தோராயமாக நாற்பது இருக்கலாம். அதிலும் அந்த பெண் வெளிர் மஞ்சள் நிறத்தில் இரவு உடை(nighty) அணிந்திருப்பார். நிறைய கனவுகளில் அதே உடை. அதன் பூக்கள் வடிவமைப்பு கூட நினைவில் இருக்கிறது.

         நண்பரே இதற்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

தங்களது விளக்கம் நூறு சதவீதம் பொருந்தி வருகிறது. மிகுந்த நன்றி நண்பரே...  (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

Thursday, November 18, 2010

நான் போகிறேன் மேலே மேலே....

     சமீபத்தில் நண்பர் பிரபாகரன் அவர்களது கனவு பற்றிய பதிவில் நண்பர் எஸ்.கே அவர்கள் அழகாக விளக்கம் அளித்து அசத்தியிருந்தார்.  அதன் பின்னூட்டத்தில் எனது கனவிற்கும் விளக்கம் அளிக்க முடியுமா எனக் கேட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக என் கனவை விளக்குகிறேன்..

                இந்த கனவு கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் ஏறத்தாழ இருபது முறைக்கு மேல் வந்திருக்கும். இது, இந்த கனவு மட்டும் தனியாக வந்த கணக்கு. அதேபோல சில நீளமான கனவுகளில் ஒரு பகுதியாக இதே கனவு கணக்கற்ற முறையில் வந்துள்ளது. மற்ற கனவுகளைப் போல காலையில் எழுந்தவுடன் இந்த கனவு மறந்துவிடுவது இல்லை. நீளமான கனவுகளிலும் மற்றப் பகுதிகள் மறந்துவிட்டாலும் இந்தப் பகுதி மட்டும் மறக்காது. அந்தக் கனவு,.                     ஒரு பெரிய புல்வெளி. எங்கும் பச்சை. கண்ணுக்கெட்டும் தூரம் வரை கட்டிடமோ வேறு பொருட்களோ இல்லை. எல்லா திசைகளிலும் தொடுவானம் வரை மைதானம் பரந்து விரிந்து இருக்கிறது. நான் மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறேன். பின்னால் இருந்து ஒரு குரல் "வேகமாக வேகமாக" என உற்சாகம் கொடுக்க, ஓட ஆரம்பிக்கிறேன். ஒரு காலை தரையில் வைத்து அழுத்தி   எம்பிக் குதித்து லாங் ஜம்ப் தாண்டுவது போல, மறுகாலை வெகுதூரத்தில் வைக்கிறேன். அதேபோல அந்தக் காலையும் வைத்து அழுத்தி லாங் ஜம்ப் தாண்டி   ஓடுகிறேன்.  ஒரு ஸ்டெப்க்கும்  இன்னொரு  ஸ்டெப்க்கும் இடையிலான இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. கொஞ்ச  நேரத்தில் ஒரு அடிக்கும் மற்றொரு அடிக்கும் இடையில் பத்து, இருபது மீட்டர் தூரம் வரை செல்கிறது. இதைப் பார்த்த உடன்  இன்னும்   வேகமாக ஓடுகிறேன், காலை வெகு அழுத்தமாக தரையில் வைத்து அதிக விசையுடன் தாவுகிறேன். சிறிது நேரத்தில் கால் தரையில் படவே இல்லை. காற்றிலே ஓடுகிறேன். பறப்பது போல. ஆனாலும் காலை அசைப்பதை நிறுத்தவில்லை. கிட்டதட்ட ஒரு ஏரோப்ளேன் டேக் ஆப் ஆவது போல இருக்கிறது இந்த நிகழ்வு. காற்றிலும் ஓடுவது போல காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறேன். பறந்தது போதும் என்று நினைக்கும் போது காலை ஆட்டுவதை நிறுத்துகிறேன். தரைக்கு வந்துவிடுகிறேன். தரைக்கு வந்த உடன் விழிப்பு   வந்துவிடும்.    இக்கனவு பலமுறை வந்திருப்பதால் துல்லியமாக நியாபகத்தில் இருக்கிறது. விழிப்பு வந்த உடன் பறந்து விட்டு வந்த ஒரு சுகமான பீலிங் இருக்கும். கனவு போலவே தோன்றாது. நிஜத்திலேயே பறந்தது போல இருக்கும். கனவிலேயே இவ்வளவு தூரமாக தாண்டுகிறோம், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டால் பதக்கம் நிச்சயம் போன்ற எண்ணங்கள் தோன்றும்.

   இதே கனவு மற்ற கனவுகளில் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. கனவில் ஆபத்து ஏற்படும் நேரங்களில் இது போல ஓடி தப்பித்து இருக்கிறேன். அதே போல இன்னும் நிறைய கனவுகளில் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. சிலநேரங்களில்  மைதானத்திற்கு பதில் நீண்ட சாலை, பின்னால் கேட்கும் குரல் தெரிந்த நபராக இருக்கும். கனவு முடிந்து விழிப்பு வரும் போது தான் உடல் எடையை உணர்வேன்.

           இதுக்கு என்ன தாங்க மீனிங்? ஏன் இதே கனவு தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே மாதிரி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது?

   டிஸ்கி: என் கனவிற்கு ஏற்ற படங்கள் கிடைக்கவில்லை. ஓரளவிற்கு ஒத்து வந்த படங்களை சேர்த்திருக்கிறேன்.
                 

                      

Tuesday, November 16, 2010

நமக்கும் ஒரு என்கவுண்டர்

   

           செவ்வாய் கிழமை விடியும் போதே மழை பெய்துகொண்டே  இருந்தது.... காலையில்  இருந்து வெளியில் போகமுடியவில்லை.  எதோ பக்கத்து வீட்டு புண்ணியத்துல அப்ப அப்ப சூடா தேநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது.  மாலை நேரம் வடை சாப்பிடலாம் என முடிவு செய்து மலையாள சேச்சியின் வடை கடைக்கு சென்றோம் நானும் என் நண்பனும். சேச்சி ஒரு சின்ன பிளாஸ்டிக் தார்ப்பாயின் கீழ் அடுப்பை வைத்து, எங்களைப் போல  மழைக்கு வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பல பேரின்  ஆசைகளை  பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

            அடுத்து நடந்தது தான் பெரிய காமெடி.. சேச்சியிடம் வடை ரெடி ஆகும் வரை மழையில் நனையாமல்  இருக்க அருகில் இருந்த  ஆட்டோவில்  நானும் என் நண்பனும்  உக்கார்ந்து  இருந்தோம். அப்போது  பக்கத்து வீட்டில்  இருந்து ஒரு சிறுமி 10  வயது இருக்கும், டியுஷன்   செல்வதற்காக   வெளியில் வந்தாள். மணி ஐந்து தான் ஆகியிருந்தது. ஆனால் எழு மணி போல இருட்டியிருந்தது. தெருவில் யாரும் இல்லை.

      அந்த பாப்பா மழையில் வெளியில் வருவதும், டியுஷன் போக மனம்  இல்லாமல் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தாள். உடனே எனக்கும் என் நண்பனுக்கும் பழைய கால சிந்தனைகள், நம்மலாம் அந்த காலத்துல  எந்த டியுஷன்க்கு போனோம்?   (அந்த காலம்னா  உடனே பிளாக் அண்ட்  ஒயிட்ல  யோசிக்காதிங்க. நாங்களும் யூத் தான்)  இன்னைக்கு ஒருநாளாவது பாப்பா சந்தோசமா இருக்கட்டும் என்று என் நண்பன் ஒரே ஒரு பொய் தாங்க சொன்னான்.  அது என்கவுண்டர் அளவு போகும்னு நெனைக்கவே இல்லைங்க... 

      "பாப்பா உனக்கு டியுஷன் இல்ல. லீவ் விட்டுடாங்க." இது தாங்க அந்த பொய். ஆனா அதுக்கு அந்த பாப்பா பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். அதன்பிறகு தான் நாங்கள் பண்ணிய தவறு நினைவுக்கு வந்தது. நாங்க ஒரு ஆட்டோவில் இருக்கோம், இருட்டு வேறு, மழை, தெருவில் யாரும் இல்லை. அப்போது அந்த பாப்பா ஐயோ கடத்துறாங்க என ஒரே ஒரு சவுண்ட் விட்டிருந்தால் எங்க நிலைமை என்ன ஆகிருக்கும்? மவனே உனக்கு என்கவுண்டர் தாண்டா.

  ஆகவே மக்களே சாலையில் முன்பின் தெரியாத  சிறு குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்.

   டிஸ்கி: எந்த ஒரு முறைதவறுதலுக்கும்  அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக தான் லஞ்சம் நமது சமூகத்தில் முதன்முதலில் நுழைந்திருக்கும். ஆனால் இன்று டிராபிக் முதல் டெலிகாம் வரை புரையோடிப் புண்ணாகி நாறுகிறது. இதே போன்ற நிலைமை நாளை என்கவுண்டர்களுக்கும் வரலாம். தேன் எடுக்கும் போது புறங்கையை நக்கியவன் சும்மா இருக்க மாட்டான் என்பார்கள். கோவை என்கவுண்டர் முறைதவறுதலின் நியாயப்படுத்தப்பட்ட முதல்படி. புறங்கையை நக்கிவிட்டார்கள். இனி சும்மா இருப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.