வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Sunday, August 29, 2010

தாயே! உன்னைத் தலை வணங்குகிறேன்

  இப்போது ஒரு புது டிரண்ட் உருவாகியுள்ளது. ஆங்கில மருத்துவத்தை குறைகூறி மாற்று மருத்துவத்தை புகழ்ந்தால் முற்போக்காளர், சிந்தனைவாதி, தமிழ்ப்பற்று உடையவர், அறிவாளி, இன்னும் பல.....
இது நிச்சயமாக அவர்களுக்கான பதிவு அல்ல. மிச்சம் இருக்கும் சிந்திக்க தெரியாதவர்களுக்கு... (சிந்தனையாளர்கள் மன்னிக்கவும், அவர்கள் இத்துடன் கழண்டு கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.)
ஆங்கில மருத்துவத்தின் நன்மைகள் மறைக்கப்பட்டு ஒரு சார்புள்ள கருத்துகள் அதிகம் வெளிவரும் நேரத்தில், மற்றவற்றின் முகத்திரையை கோபத்துடன் கிழிக்கும் பதிவு.  இனி கோபத்தின் வெளிப்பாடு.....

     மாற்றுமருத்துவ  வக்கீல்களால் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தை "ஆங்கில மருத்துவம் கெமிக்கல்ஸ்". தெரியாம தான் கேக்குறேன், லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா?   சிட்ரிக் ஆசிட் ல சோடியம் குளோரைட சேத்து ஊறுகாய் போட்டா கெமிக்கல் இல்ல. ஆங்கில மருந்துகள் செவ்வாய் கிரகத்திலா செய்யப்படுகிறது? இங்கு உள்ள மூலப் பொருட்கள் வைத்து தானே. பனை மரத்தில் இருந்து காய்ச்சி வடிக்கும் பனை வெல்லம் இயற்கை. டிஜிடாலிஸ் இலைகளில் எடுக்கப்படும் டிகாக்சின் கெமிக்கல். உங்களுக்கு புரியாத பேர்ல இருந்தா அது கெமிக்கலா? சாணிகுள்ள கிழங்க வச்சு சுட்டு எடுக்குற மஞ்சள் இயற்கை. ஆனா லேப்ல சுத்தமா தயாரிச்சா கெமிக்கல். பாராசிட்டமால் கெமிக்கல்னா பனை வெல்லமும் கெமிக்கல் தான், திங்குற சோறு கூட கெமிக்கல் தான். அப்ப நீங்க சொல்ற, சாணிகுள்ள சுட்டு, நெருப்புல உருக்குற மாற்று மருந்துகள் எல்லாமே இதைவிட மோசமான கெமிக்கல் தான்.
            காலராவிற்கு கொய்னா இலையில் மருந்து உண்டு. ஓவ்வொரு இலையிலும் சிறிது அளவு இருக்கும் மருந்துப் பொருளை பெற கொய்னா இலைகளை அதிக அளவில் தின்று, அந்த இலையில் உள்ள மற்ற பொருட்களால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைப் பொறுத்துக் கொள்வோம். ஆனால், காலராவிற்கான மருந்தை மட்டும் அந்த இலையில் இருந்து தனியே பிரித்து எடுத்து தந்தால் உண்ண மாட்டோம். ஏனென்றால் அது கெமிக்கல்.
      அடுத்து பக்கவிளைவு. ஆங்கில மருந்துகள் பக்கவிளைவு இருப்பவையாம். மற்ற மருந்துகள் பக்கவிளைவு இல்லாதவையாம்.  சூரணம், கசாயம், லேகியம், பொடி, உருண்டைன்னு 1008 ஐட்டம் இருக்கு. சந்தோசம். ஆனா அதுல எதாவது ஒன்னே ஒன்னுக்கு பக்கவிளைவுகள் வரலன்னு நிரூபிச்ச ஆதாரம் இருக்கா? இல்ல இது தான் பக்க விளைவுன்னு சொல்ல ஆய்வுகள் இருக்கா? கேட்டா, கடவுள் கொடுத்த வைத்திய முறையாம். சந்தேகப்பட கூடாதாம். காமெடியா இல்லை? இது வர என்ன பக்க விளைவுனு ஆய்வு செஞ்சது இல்ல. அத கண்டுபிடிக்க முயற்சி பண்ணுனது கூட இல்ல.  பக்க விளைவுகள் என்ன என்று தெரியாத மருந்துகளை, பக்க விளைவு இல்லாத மருந்து என்று சொல்வது, பித்தல்லாட்டதின் உச்சம். தண்ணீரை அதிகமாக குடித்தாலே பக்கவிளைவு வரும். இவங்க தாத்தா இவருக்கு காதுக்குள்ள சொன்ன மருந்துல என்ன என்ன இருக்கபோதோ? (பெயருக்கு ரெண்டு பேருக்கு மருந்த குடுத்து, ஆய்வு செஞ்சு  நானும் மருந்து நானும் மருந்துன்னு வான்ட்டடா வார மருந்துகளும் அதிகமா இருக்கு)
    ஆனா முறையா ஆய்வு நடத்தி இது தான் விளைவு, இந்த டோஸ்க்கு மேல சாப்பிட்டா இந்த பக்க விளைவுன்னு சொல்ற ஆங்கில மருத்துவத்தில் "பக்க விளைவு பக்க விளைவு". நல்லா இருக்கு நியாயம். ஒரு குப்பை லாரி வீட்டுக்குள்ள இருக்க குப்பை கூடையை பார்த்து சிரிக்குதாம் "குப்பை, குப்பை"
        உலகத்தின் அனைத்து நோய்களையும் கண்டறிந்து, வகைப்படுத்தி, அவற்றின் "அறிகுறி, போக்கு" (symptoms & course of disease) ஆகியவற்றை ஆய்வு செய்து குணப்படுத்தும் முறைகளை உருவாக்கியது ஆங்கில மருத்துவம் தான்.
     ஆங்கில மருத்துவம் கூறும் முன் "உயர் இரத்த அழுத்தம்" என்று ஒரு வியாதி இருப்பது மற்ற மருத்துவத்திற்கு தெரியுமா? எதை வைத்து இரத்த அழுத்தத்தை அளந்தனர்? இரத்த சர்க்கரை அளவை, ஆங்கில மருத்துவம் இல்லாமல் மற்ற முறைகளில் கண்டுபிடிக்க இயலுமா? நோயை கண்டுபிடிக்க அடிப்படை கருவிகளே ஆங்கில மருத்துவம் வழங்கியது தான். பிறகு தான் நோய் யாருக்கு உள்ளது என்று பார்த்து வைத்தியம் செய்ய? நோயை கண்டுபிக்க துப்பில்லாத முறைகளா அதை குணப்படுத்த முடியும்?
    சர்க்கரை அளவு இது நார்மல், இரத்த அழுத்த அளவு இது நார்மல், இவை தான் அறிகுறி, இது தான் நோயின் போக்கு, என்று அனைத்தையும் கூறியது ஆங்கில மருத்துவம். ஆனால், சிகிச்சையை மட்டும் இவர்கள் கண்டுபிடித்து விட்டார்களாம் .  நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வரேன், ரெண்டு பேரும் ஊதி ஊதி ......... போ..டா......க்.............
 முதல்ல மற்ற மருத்துவ முறைல இரத்ததுல சக்கரை எவ்வளவு இருக்குன்னு கண்டுபிடிக்க கத்துக்கலாம். அப்புறம், சிகிச்சை செய்யலாம்.
          ஆங்கில மருத்துவம் ஏதோ நேற்று கண்டுபிடிக்கப் பட்டது போலவும், மற்றவை பூமி பிறந்து தொப்புள் கொடி வெட்டும் போதே இருப்பது போலவும் ஒரு பேச்சு.  பார் யுவர் ரெபரன்ஸ், ஆங்கில மருத்துவத் தந்தை ஹிப்போகிரேடஸ் பிறந்தது, கி.மு நானுறு. ஹோமியோபதி தந்தை ஹானிமன்  ஹோமியோபதி கருத்தை முன்மொழிந்தது 1796ல்.
   சாமியார் ஆவது போலவே இயற்கை வைத்தியர் ஆவது இப்போது  நல்ல பிசினஸ். ஏதவாது யுனிவர்சிட்டில ரெண்டு மாசம் படிச்சு ஒரு செர்டிபிகட் வாங்கி, அமைதிப்படை அம்மாவாசை மாதிரி எங்க தாத்தா வைத்தியர்னு சொன்னா போதும். பச்சரிசிய அரைச்சு குட்டி குட்டியா உருட்டி வச்சு பக்க விளைவு இல்லன்னு சொன்னா போதும். 
     கதவை திறந்து வைத்துவிட்டு, காற்றும் பெண்களும்  வராத நேரத்தில்,  புற்றுநோயை குணப்படுத்தி விட்டு, அந்த சாமியார் கண்ணை மூடிக்கொண்டு, "அவரைக் காயும், ஆட்டுப் புழுக்கையும் சேர்த்து அரைத்து, நாக்கு படாமல் நாலு நாள் நக்கு" என்று சொன்னது அல்ல ஆங்கில மருத்துவம்.
   நோயாளிகளுடன் இரவு பகலாக வருடக்கணக்கில் பழகி, நோயைக் கூர்ந்து கவனித்து, மைக்ராஸ்கோப் முதல் அனைத்திலும் நோயை சோதித்து, வாழ்நாள் முழுவதையும் மருத்துவத்திற்கு அர்ப்பணித்து, சில நேரங்களில் உயிரையும் இழந்து, கணக்கற்ற ஆய்வுகள் நடத்தி, கண்ணீரால் காத்த பயிரடா சர்வேசா!..... ஒரு  ஒரு சின்ன அசைவுக்கும் ஆயிரக்கணக்கில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும்.
  தெரியாமல் தான் கேக்குறேன். எந்த ஒரு மாற்று மருத்துவத்திலும்  "ஆஸ்த்மா, சர்க்கரை வியாதி னு ஒரு குறிப்பிட்ட லிஸ்ட்ல இருக்க வியாதிக்கே சிகிச்சை தருவாதக விளம்பரம்?
      ஏன்? ரோடுல ஆக்ஸிடன்ட்ல சிக்குனவருக்கு உடனடியா லேகியம் குடுத்து காப்பாத்தலாமே? ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு சூரணம் கொடுக்கலாமே.
  அதுலாம் முடியாது. அரைமணி நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சுரும். ஆனா ஆஸ்துமா ஆறு மாசம் சாப்பிடு. அப்படின்னு சொல்லலாம்.
    ஆங்கில மருத்துவம் வியாபாரமாகி விட்டதாம். மாற்று மருத்துவத்தை நடத்த ஹரிச்சந்திரன் வந்து கொண்டு இருக்கிறான். மற்ற மருத்துவ முறைகளில் எளிதாக ஏமாற்றலாம் என்பது தெரியாதோ?
   சிறுநீரகத்தின் உறிஞ்சும் திறனை குறைத்து சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் லாசிக்ஸ் என்ற மருந்தை பொடி செய்து வைத்து தேவ பொடி என ஏமாற்றி, சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளிடம் பணம் பறித்து, அவர்களின் நோயை அதிகரிக்கச் செய்த போலியை நான் அறிவேன். அவர்களும் சிறுநீர் அதிகமாக போகிறது. நோய் தீர்ந்துவிட்டது என செல்வர். இது போன்ற பித்தலாட்டம் ஆங்கில மருத்துவத்தில் உண்டா?
         ஆங்கில மருத்துவம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக நினைக்க வேண்டாம். இந்த உலக மக்களுக்காக உலகத்தில் தோன்றியது.  
   நம் சித்த வைத்திய முறைகளில் கண்டறிந்த பலவற்றை சுயநலத்தால் யாருக்கும் சொல்லாமல் அழித்தோம். அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி இருந்தால் மருத்துவ உலகில் எங்கோ சென்றிருப்போம்.அதன் விளைவு தான் முழுமையற்ற நம்  பாரம்பரிய மருத்துவம். அவற்றை மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும். அனால் அது வரை........

      முடியும் என்றால் நிரூபித்துக் காட்டியும், முடியாது என்றால் ஒத்துக்கொண்டும், நிமிர்ந்த நடையுடன், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்நாளை அதிகரித்த
 அல்லோபதி மருத்துவத் தாயே உன்னைத் தலை வணங்குகிறேன்.
 

15 comments:

பூங்குழலி said...

உங்கள் கருத்துகளை சரியானவை .இயற்கை மருத்துவத்தின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை .ஆனால் இவர்கள் ,பயன்படுத்துவதை தெரிவிக்க மறுப்பதும் ,முறையான ஆராய்ச்சிக்கு மறுப்பதும் சரியில்லை .பல இடங்களில் ஸ்டீராய்டு மாத்திரைகளை கொடுத்து விட்டு இயற்கை மருத்துவம் என்று ஏமாற்றுகின்றனர் .இதற்கென B.H.M.S,B.S.M.S போன்ற படிப்புகள் இருக்கின்றன .இவற்றை படிக்காதவர்கள் சிகிச்சை செய்வதை தடை செய்ய வேண்டும் .நல்ல பதிவு .

கக்கு - மாணிக்கம் said...

இதே போன்று நானும் சிந்தித்ததுண்டு. அலபதி மருத்துவ முறைகளை குறை கூறுபவர்கள் எவருக்கும் அடிபடையான வேதியியல் அறிவு அற்றவர்கள். இதனை ஏற்க மாட்டார்கள். இந்த அறிவிலித்தனம் மறைக்கப்பட்டு அவர்கள் கூறும் புனைந்துரைகளே,கட்டுகதைகளே இன்று டி.வி. களில் விளம்பர வியாபாரம் ஆகிவிட்டது. கார்போஹடிரடே என்பது அரிசி போன்ற மாவுபொருல்களும் அடிபடையில் ஒன்றுதான் என்ற அறிவு அற்றவர்கள்.

//ஏன்? ரோடுல ஆக்ஸிடன்ட்ல சிக்குனவருக்கு உடனடியா லேகியம் குடுத்து காப்பாத்தலாமே? ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு சூரணம் கொடுக்கலாமே.//

மேலோட்டமாக பார்த்தல் இது கேலியாக தோன்றும் ஆனால் இதற்கு அவர்களால் பதி சொல்ல முடியாது. உடனே பழங்கதைகள் பேசுவார்கள்.
நல்ல பதிவு .

அலைகள் பாலா said...

@ பூங்குழலி said...
நன்றி

@ கக்கு - மாணிக்கம் said...
நிஜம் சார், அடிப்படை வேதியல் அறிவு, உடலின் இயக்கம் பற்றிய அறிவு கூட இல்லாமல் வெறும் விளம்பரங்களால் ஏமாற்றும் கூட்டம் அதிகமாக உள்ளது.

எஸ்.கே said...

முதலில் உங்கள் பதிவிற்கு மிகப்பெரிய நன்றி!.
எந்த மருத்துவ முறையை குறை கூறுவதும் தவறுதான்! சித்த வைத்தியம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை கடைபிடிப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றிற்கு ஒரு எல்லை உண்டு.
அறுவைசிகிச்சை என்ற ஒன்று ஆங்கில மருத்துவத்தில் தானே வந்தது! அது இல்லாமல் பல முறைகளை குணப்படுத்த முடியாது. பல வித ஸ்கேன்கன், ஆய்வுகள் அனைத்து ஆங்கில வழித் தோன்றல்களே!

அதனால் எதையும் மட்டம் தட்ட கூடாது. தலைவலி காய்ச்சல் சளி போன்ற சிறிய பிரச்சினைகளுக்கு நம் பாரம்பரிய எளிமையான home remedyகளை கடைபிடிக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் நாம் அலோபதிக்கு வந்துதான் தீர வேண்டும்.

அலைகள் பாலா said...

நன்றி எஸ்.கே சித்த மருத்துவத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்து, அறிவியலை அதிகம் உபயோகப் படுத்திய முறை சித்த மருத்துவம் தான். நாம், "தமிழர்கள்" கண்டறிந்த முறை என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் நிலை இன்று என்ன? தடி எடுத்தவன் தண்டல்காரன். முறையாக கற்றுக் கொள்ளாமல் நிறைய பேர் அதை அசிங்கப் படுத்துகின்றனர். முதலில் ஒழுங்கு படுத்த வேண்டும்.போலிகளை ஒழிக்க வேண்டும். அறிவியல் ரீதியிலான விளக்கங்களை அளிக்க வேண்டும்.

அலைகள் பாலா said...

விஜய் டிவியில் அரைமணி நேர நிகழ்ச்சியும், தனியார் பல்கலைகழகத்தில் மூன்று மாதப் படிப்புச் சான்றிதழும் இருந்தால், நீங்களும் இயற்கை வைத்தியர்.

எஸ்.கே said...

உண்மை மருத்துவத்தின் பேரால் பல போலிகள் உருவாவதுதான் மருத்துவம் சீரழிய முக்கிய காரணம். தாங்கள் சொல்வது நானே பல விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். 800 ரூ கட்டணத்தில் ஆறுமாத படிப்பை அஞ்சல்வழியாக முடித்தால் ஹோமியோபதி மருத்துவராம் எங்கே போய் சொல்வது. மருத்துவம் அனுபவத்தாலும் ஆராய்ந்து உணர்வதாலும் பெறப்படும் அறிவு. அதை இப்படி காகிதங்களால் கறைபடுத்துகிறார்கள்.

பிரியமுடன் ரமேஷ் said...

மிகவும் அவசியமான பதிவு பாலா..உங்கள் கோபம் நியாயமானதே..ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியால்தான்..பெரும்பாலானோர் உயிர் பிழைத்திருக்கிறார்கள்...அவசர சிகிச்சைகளுக்கு மாற்று மருந்தை இவர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்...பதறி அடித்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் பக்கமே வருவார்கள்...

அலைகள் பாலா said...

நன்றி ரமேஷ் சார்

பதிவுலகில் பாபு said...

நல்ல பதிவு..

saravanan said...

very nice

புருனோ Bruno said...

//, லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா? //

இதற்கு விடை வந்ததா

புருனோ Bruno said...

மேலும் சில கருத்துக்கள்


ஆயுர்வேதமும் பக்க விளைவும்

ஆபத்து

அலைகள் பாலா said...

////, லைசின் கார்போஹைட்ரேட்னு கெமிக்கல் உள்ள அரிசிய H2O கெமிக்கல்ல போட்டு 100C ல கொதிக்கவச்சு சோறு சாப்பிடுறீங்களே அது கெமிக்கல் இல்லையா? //

இதற்கு விடை வந்ததா //

அலைகள் பாலா said...

வரலையே சார். எப்படி வரும்?