கையில் கொஞ்சம் காசு சேர்ந்தாலே மனித மூளையை நாய் நக்கிவிடும் போல.(காசு இல்லனா மனுசனே நாய் மாதிரி தான் அது வேறுவிஷயம்). நாலு நோட்ட ஒன்னாப் பாத்த உடனே, "பாருக்கு போலாமா, பப் க்கு போலாமா, இல்ல வேற எங்கயும் போலாமா, இதப் பண்ணலாமா, அதப் பண்ணலாமா" என்று தோன்றும். இந்த மாதிரி பசங்க கெட்டு போகக் கூடாது அப்படிங்கிற நல்ல எண்ணத்தில் பரிமாண வளர்ச்சியில் உருவானவங்க தான் "ஃபிகரு" (வால்பையன் சார் அப்படியா?) எவ்வளவு சம்பாரிச்சாலும் அவங்களுக்கு செலவு பண்ணவே பத்தாது.இதுல எங்க பாருக்கு போக? கல்யாணம் ஆனவங்க நிலைமை இன்னும் மோசம். காலையில் பெட்ரோல் காசுக்கு அம்மணிட்ட தான் நிற்க வேண்டும்.
வாழ்க்கைக்குப் பணம் எப்படியோ அப்படித்தான் உடலுக்கு குளுக்கோஸ். வாழ்க்கையை உடலாகவும், பணத்தை குளுக்கோஸாகவும் உருவகப்படுத்திப் புரிந்து கொண்டால், "டயாபடீஸ் பில்டிங்கின் பேஸ்மட்டத்தில் முதல் பில்லரை ஸ்ட்ராங்காக" ஊன்றிவிடலாம்.
அப்ப ஃபிகரு இன்சுலினா?
- ஆமா. கரெக்ட். அவங்க தான் இன்சுலின்.(இங்க பார்டா. அதுக்குள்ள ரெண்டாவது பில்லர்)
ஆதி காலத்தில், மனிதன் வேட்டையாடித் திரிந்த போது அடுத்த வேலை உணவிற்கு நிச்சயமில்லாத நிலை. (அப்ப ரெண்டு ருவா அரிசிலாம் இல்லயா?) எப்பவாவது கிடைக்கும் உணவை வைத்து பொழுதை ஓட்ட வேண்டிய கட்டாயம். அதற்கு நம் கதையில் வருவது போல, மாரிக்கண்ணுக்கு பணத்தை அவனது மனைவி நிர்வகிப்பது போல, கிடைக்கும் குளுக்கோஸை ஒழுங்காக சேமித்து தேவைப்படும் போது பயன்படுத்த ஒர் அமைப்பு தேவைப்பட்டது., குளுக்கோஸை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பல ஹார்மோன்கள் இருந்தன. அவற்றுள், தேவைக்கு அதிகமான குளுக்கோஸை சேமிக்கும் பொறுப்பு இன்சுலினிடம் கொடுக்கப்பட்டது. (குளுக்கோஸை மீட்டு, எடுத்துக் கொடுக்கும் பொறுப்புக்கு வேறு ஹார்மோன்கள்) சனிக்கிழமை வாங்கும் சம்பளத்தை வைத்து, அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்துவதைப் போல, ஒருமுறை உணவு உண்ட பின் கிடைக்கும் குளுக்கோஸை வைத்து அடுத்து உணவு கிடைக்கும் வரை உடலை இயக்க இவை கற்றுக்கொண்டன.
இதில் ஒரு கொடுமை என்னனா, சாப்பிட்ட உடனே இரத்ததில் ஏறுகிற குளுக்கோஸ், பாருக்கு போறப்ப மாரிக்கண்ணு கைல இருக்க பணம் மாதிரி. உடனே செலவும் ஆயிடும், உடம்புக்கும் கெடுதி. எல்லா பணமும் (குளுக்கோஸ்) செலவாயிட்டா, அப்ப அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்த......? சுருக்கமா சொன்னா, இரத்ததில் உள்ள குளுக்கோஸ் குடிகாரன் கையில் உள்ள பணம் மாதிரி. உடனே பத்திரப்படுத்தணும். இல்லனா ஆப்பு தான்
குளுக்கோஸ் - பணம்
இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
அப்புறம் எதுக்கு குடிகாரன் கையில பணம் அத புடுங்கிருங்க பா. புடுங்கிடலாமா??
அடுத்த பாகத்தில்.... .
டிஸ்கி: சந்தேகங்களையும், கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க நட்புகளே.. மறக்காம ஓட்டையும் போட்டுருங்க.
3 comments:
nanraga irukkirathu
Nalla thaan solreenga
மிகவும் அருமை சார். பதிவிடுங்க காத்திருந்துபடிகிறோம்.
Post a Comment