காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வாளர்களுக்கு அவசர கடிதம் வந்தது. அது தாங்கி வந்த செய்தி "நகரில் பெருகி வரும் வாகன விபத்துகளை குறைக்க ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்". அனைவரும் அது சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை, வேறு வேறு எண்ணங்கள்.. "இது மாதிரி 1000 மீட்டிங் போட்டாச்சு. நோ யூஸ்", "நம்ம ஏரியால தான் ஆக்ஸிடன்ட் நிறைய நடந்துருக்கு, என்ன ஆகுமோ", "டிரங்கன் டிரைவ் பிடிக்காம விட்டோமே, அத கேட்பாரோ?" "ஒருவேளை ஹெல்மெட் போடுறத ஸ்ட்ரிக்ட் பண்ண போறாரோ?" "மீட்டிங் முடிஞ்ச உடனே சாப்பாடு இருக்குமா?" அந்த இடமே mind voice-ன் இரைச்சலால் நிரம்பி நிசப்தமாய் இருந்தது. ஆணையாளர் நுழையும் போதே அனைவரின் எண்ண ஓட்டத்தையும் ஊகித்துக் கொண்டே வந்தார்.
" ஆக்சிடன்ட் குறைய நீங்க நினைக்குற மாதிரி ஹெல்மெட் போடுறது, டிரங்கன் டிரைவ் பிடிக்குறது, இதெல்லாம் பழசு. ஏற்கனவே ட்ரை பண்ணி பெருசா எதுவும் ரிசல்ட் இல்ல. இப்போ புதுசா ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்?"
ஆய்வாளர்களிடம் நீண்ட மௌனம். சிறிது தயக்கத்திற்குப் பிறகு ஒருவர் "சார், எல்லா இடத்துலயும் செக்கிங் ஸ்ட்ரிக்ட் பண்ணலாம் சார். பைன் நிறைய போடலாம்."
ஆணையாளர் சிரித்து விட்டார். "ஹா ஹா ஹா. எங்க வர்றீங்கனு புரியுது. இது எலெக்சன் டைம். அப்படி பண்ண வேணாம்னு மேலிட உத்தரவு." அதற்கு அடுத்து யாரும் வாயை திறக்கவில்லை.
"ஒ.கே. நானே ஒரு ஐடியா சொல்றேன்." ஆணையாளர் தொடர்ந்தார். "ஒரு விபத்த பாத்த கொஞ்ச நேரத்துக்கு கவனமா ஓட்டுறது மனித இயல்பு. அதுனால சிட்டில முக்கியமான இடங்கள்ல எல்லார் கண்ணுலயும் படுற மாதிரி ஏற்கனவே நடந்த விபத்துகளோட போட்டோஸ் பெருசா வைப்போம். இது மக்களுக்கும் தொந்தரவு இல்ல. ஒரு புது முயற்சியா இருக்கும்."
"நம்ம வைக்குற போட்டோ கொடூரமா இருக்கணும். அத பாத்துட்டு யாரும் வேகமா போகவே கூடாது. இங்க இருக்குற போட்டோஸ்ல ஒன்ன செலக்ட் பண்ணுங்க. இதெல்லாம் சிட்டில போன வருஷம் நடந்த விபத்துகளில் எடுக்கப்பட்ட்டது ."
அனைவரும் ஒருமனதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தனர். லாரி சக்கரத்தின் கீழ் தலை நசுங்கி இறந்த ஒருவனுடைய போட்டோ. அவன் வந்த பைக் உருக்குலைந்து அருகில் கிடந்தது. பார்க்கவே கொடூரமாக இருந்தது.
"இந்த போட்டோ எல்லாருக்கும் ஒ.கே தான? சிட்டிக்கு உள்ள டிரைவ் பண்ற யாரும் இந்த போட்டோவ பாக்காம போக கூடாது. பாக்குற யாரும் டிரைவ் பண்ண பயப்படனும். அப்படி எல்லா இடத்துலயும் இத பெருசா வைங்க" ஆணையாளர் அவருக்கே உரிய கட்டை குரலில் கூறினார்.
இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மட்டும் மெதுவாக எழுந்து, "இந்த போட்டோ வேணாம் சார்" என்றார்.
"ஏன்யா வேணாம்?"
"ப்ளீஸ் சார் வேணாம்." அழுதே விட்டார்.
"அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்? ரொம்ப கொடுரமா இருக்கா?"
"இல்ல சார். அது என் பையன் சார்...... "
7 comments:
நல்ல சிறுகதை...அதிர்ச்சியாக இருந்தது...
நன்றி ரமேஷ்.
இது உண்மை சம்பவம் போல இருக்கிறது , நகரத்தில் பதின்ம வயதினர் தங்கள் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்வதாக நினைத்துக் கொண்டு பெற்றவர்களைத்தான் வேதனையில் ஆழத்திவிட்டு செல்கின்றனர்..
இந்தக் கதைக்கு மட்டுமல்ல, இவர்கள் ஃபைன் என்ற பெயரில் வாங்கும் லஞ்சத்திற்கும் இதுதான் முடிவு.
அருமை.......
@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி அண்ணே!
@ ramalingam
கருத்துரைக்கு நன்றி சார்.
@ உலவு.காம்
நன்றி
நல்ல சிறுகதை...
Post a Comment