வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Tuesday, August 17, 2010

சுகரும் ஃபிகரும் பாகம் - 1


        படிச்சவங்களுக்கு சுகர், பாட்டிகளுக்கு சக்கர வியாதி, பீட்ட்ரு விட நெனச்சா டயாபடீஸ், இப்படி நிறைய பெயர்களில் நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட வியாதி சுகர் என்ற டயாபடீஸ் என்ற சர்க்கரை வியாதி. இப்போதெல்லாம் இது அந்தஸ்தின் அடையாளம். பொது இடங்களில் "சுகர் கம்மியா போடுங்க, எனக்கு டயாபடீஸ்" என்று சொல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள்.
  அது சரிப்பா, சுகருக்கும் ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே... சம்பந்தம் இருக்கே..
      ரெண்டுமே பெரிய தொல்லை. ஆனா கூட இருந்தா ஒரு வெட்டி பெருமை.
      சுகரும் சரி ஃபிகரும் சரி பர்ஸ்க்கு பாம் வைக்குறதுல கில்லாடிங்க.
  ரெண்டுமே வாய் கொழுப்புல நமக்கு நாமே வச்சுகிற சூன்யம். (இங்க பார்டா சிலேடைய)
               சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்
               ஃபிகரு போனா ஒயின்ஷாப்.
         ஆனா ஒரு விசயத்துல சுகர நம்பலாம்.  நம்மவிட்டு ஃபிகர் போனாலும் சுகர் போகாது.
       சுகர் பத்தி சப்ஜெக்ட்க்கே வராம 20 பக்கம் பேசலாம். ஆனா சுகர்னா என்ன?  சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா? இட்லி சாப்பிட்டா நல்லதா? சப்பாத்தி சாப்பிட்டா நல்லதா? எத்தனை சாப்பிடலாம்? இன்சுலின் எப்பப் போடணும்? ... இந்த மாதிரி எக்கச்சக்க கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு. ஃபிகர பத்தி தெரிந்த அளவுக்கு சுகர பத்தி தெரியல. நம்மில் நிறைய பேருக்கு மருத்துவ அறிவில்   "'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் வீக்கு."
         பேஸ்மட்டத்தில் இருந்து டயாபடீஸ் பத்தி முழுமையாக விளக்குகிற தொடராக இதை ஆரம்பித்துள்ளேன். பொறுமையாக படித்தால் நிச்சயம் டயாபடீஸ் பற்றிய புரிதல் அதிகமாகும்.
         சர்க்கரை வியாதி என்பது நம் உடலில் உணவு சேமிப்பதில் உள்ள குறைபாடு (storage disorder) - இப்படிலாம் சொன்னா ஏதோ 12வது பயாலஜி புக் வாசிக்கிற ஃபீலிங் வந்துரும். ஸ்டோரேஜ் டிஸார்டர்க்குள் போகும் முன் ஒரு சிறிய கதை, புரிதலுக்காக.
    மாரிக்கண்ணுக்குக்  கொத்தனார் வேலை. வாரச் சம்பளம். அவனோட காண்ட்ராக்டர் ரொம்ப நல்லவர். சனிக்கிழமை கரெக்ட்டா சம்பளம் தந்துருவார். மாரிக்கண்ணுக்கு ஒரு கெட்ட பழக்கம். கைல 180 ருவாய்க்கு மேல இருந்தா, எவ்வளோ காசு இருந்தாலும் டாஸ்மாக் பார்க்கு போயி காலியாக்கி விடுவான். கொஞ்ச நேரத்தில பாத்ரூம் போனா எல்லா காசும் தண்ணியா போய்டும்.   ஆனா ஒரு நல்ல பழக்கம் 180க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த பக்கம் போக மாட்டான்.(அதென்ன ஒரு கணக்கு 180? பிறகு சொல்றேன்). அதனால சம்பளம் வந்த உடனே எல்லா பணத்தயும் வீட்டுக்காரம்மாட்ட(ஹவுஸ் ஒனர் இல்லிங்க) கொடுத்துடுவான். அவங்க கொஞ்சம் பொறுப்பான குடும்ப தலைவி. அஞ்சறை பெட்டில கொஞ்சம், அலமாரில கொஞ்சம்னு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைப்பாங்க.அப்பப்ப செலவுக்கு எடுத்துகுவாங்க. வாரத்தில ஒருநாள் மட்டும் சம்பளம் வந்தாலும் அத வச்சு முழுவாரத்தையும் பிரச்சனையில்லாம சமாளிச்சாங்க. .
                             என்னமோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு? அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு? அடுத்த பாகம்.....

5 comments:

Jey said...

வாங்க ராசா,நல்லா எழுதுரீங்க, நல்ல சுவாரஸ்யமான நடை...கலக்குங்க....
// சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்
ஃபிகரு போனா ஒயின்ஷாப். //

பார்ரா எதுகை மோனை!!!???, கலக்குங்க தல...

Bruno said...

ஆக மாரிமுத்து டாஸ்மாக் பக்கம் போகவேண்டாமென்றால் அவர் கையில் 180 ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது

அருமை

அழகாக ஆரம்பித்து உள்ளீர்கள்

தொடரவும்

இப்படி சொல்வதை விட்டு விட்டு Splay is a physiological term that refers to the difference between urine threshold (the amount of a substance required in the kidneys before it appears in the urine) and saturation, or TM; in this instance, saturation refers to an exhausted supply of renal reabsorption carriers. In simpler terms, splay is the concentration difference between a substance's maximum renal reabsorption vs. appearance in the urine. Splay is usually used in reference to glucose; other substances, such as phosphate, have virtually no splay at all.

என்றால் யாருக்கு புரியும்

:) :) :)

அலைகள் பாலா said...

@ ஜெய் அண்ணே! வந்ததுக்கு ரொம்ப சந்தோசம். பாராட்டுனது ரொம்ப ரொம்ப சந்தோசம்

அலைகள் பாலா said...

@ புருனோ சார்
உங்ககிட்ட இருந்து தான் மருத்துவ விஷயங்களை தமிழில் புரியும்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணமே வந்தது. நன்றி சார்.

நிலாமதி said...

சுகரை பற்றி அழகான் ஆரம்பம் எனக்கு பிகர் தேவையில்லை சுகரைப்றி வாசிகக் பிடிக்கும்
ஏனென்றால் எனக்குபணகார வருத்தம் . டியாபெடிசுங்க. அட இத்தனை நாளாக் தவற விட்டுவிடேன்.
உங்கள்சேவை நாட்டுக்கு இணைய யத்தள வாசகருக்கு தேவை. நன்றி நட்புடன் நிலாமதி