வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Wednesday, October 27, 2010

ரெஃப்ரஷ் வித் லெமன்

                  பதிவுலகப்  பக்கம் வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. (உன்ன யாரு தேடுனா? அப்படிலாம் கேட்டு நோகடிக்க கூடாது). பணி ரீதியில் இட மாற்றம், அதை தொடர்ந்து இணைய இணைப்பில் பிரச்சனை, புடுங்க வேண்டிய ஆணிகள் வேறு முள்ளம் பன்றி போல் சிலிர்த்துக் கொண்டு இருந்ததால் வரமுடியவில்லை. ஆனாலும் பதிவுகளை படித்துக் கொண்டு தான் இருந்தேன். ஒ.சி சிஸ்டத்தில் இருந்து பின்னூட்டம் போட முடியவில்லை.  அதனால இப்ப என் பக்கத்த  லெமன் வச்சு ரெஃப்ரஷ் பண்ணிக்கிறேன்.  படிங்க, உங்களுக்கும் இந்த மருத்துவ தகவல் பயனுள்ளதா  இருக்கலாம்.



    எனக்கும் லெமன்க்கும் இடையே  பந்தம்  சின்ன  வயசுல இருந்தே தொடங்கிருச்சு. அப்ப எலுமிச்சம்பழம் எனக்கு தடை செய்யப்பட்ட பொருள்.  ஏனென்றால்   எலுமிச்சம்பழம்  சாப்பிட்டால் சளி பிடிக்குமாம். (அது எவ்வளவு தவறான விஷயம் என்று இப்போது தெரிகிறது)  தடை செய்யப்பட்டதாலேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு. "ஜூஸ் குடிச்சா தான சளி பிடிக்கும்? எனக்கு லெமன் சாதம் செஞ்சு குடுங்கன்னு" அறிவு பூர்வமா யோசிச்சு சாப்பிடுவேன். (நீ அப்ப இருந்தே இப்படி தானா?)  எங்க  அம்மா நெறைய லெமன பிழிஞ்சு தாழிச்சு எண்ணெய் நிறைய ஊற்றி செய்வாங்க பாருங்க சாப்பிட்டுக் கிட்டே இருக்கலாம். அதுக்கு சைட் டிஷ் எனக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு பொறியல். எங்கயாவது  ஊருக்கு போகணும்னா  "உனக்கு லெமன் சாதம் செஞ்சு வச்சுட்டு போறேன்பா" னு  சொல்லி தான் என்ன சமாளிப்பாங்க.

       இப்படியாக  லெமன் சாதத்தில் தொடங்கிய பந்தம் கையில் மூன்று ரூபாய் கிடைத்தால் வீட்டுக்கு தெரியாமல் லெமன் ஜூஸ் குடிக்கும் அளவு வளர்ந்தது. (வீட்டுக்கு தெரியாம லெமன் ஜூஸ், அவ்ளோ    நல்லவனாடா?)    மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது பசங்க  எல்லாம் ரோஸ்மில்க்  அப்படின்னு கெத்தா ஆர்டர் பண்ணும் போது நான் மட்டும்  லெமன் ஜூஸ் ஆர்டர் பண்ணுவேன். (சத்தியமா அப்ப ட்ரீட் எல்லாம்  ஜூஸ் கடைல தான்).

     அதன் பிறகு கல்லூரி வாழ்க்கை. மருத்துவ அறிவும் வளர ஆரம்பித்தது. முதல் வேலையாக லெமன் ஜூஸ் குடிச்சா சளி பிடிக்குமா அப்படின்னு பாட புத்தகத்துல தேடிப் பார்த்தேன். சீனியர்கள் கிட்ட கேட்டுப் பார்த்தேன். அப்ப தான் இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. உண்மை என்னனா எலுமிச்சம்பழத்தில் இருக்குற  விட்டமின் c சளி வராம தடுக்கும் சக்தி கொண்டது. அடப்பாவிகளா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே அப்படின்னு ஒரே கவலை. அன்னைக்கே ஆசை தீர அஞ்சு லெமன் ஜூஸ் குடிச்சேன். 

     எக்ஸாம் டைம்ல எங்களுக்கு உயிர் காக்கும் அமிர்தமே லெமன் ஜூஸ் தான்.( எங்களுக்கு  -காலேஜ்ல ஒரு நாலு நாதாரி நம்ம கூட சுத்துமே எல்லாரையும் சேர்த்து). காலைல சாப்பிடாம  எக்ஸாம்க்கு போய்ட்டு, முடிஞ்ச  உடனே வண்டிய எடுத்துக்கிட்டு ஜூஸ் கடைல போயி ஒரே டைம்ல ரெண்டு லெமன் ஜூஸ் குடிச்சு கிட்டே கொஸ்டின் பேப்பர பத்தியும் அதுக்கு நம்ம விடையளித்த அழகையும் டிஸ்கஸ் பண்ணுனா  ஒரு சுகம் இருக்கும் பாருங்க, அதுக்கே இன்னொரு தடவ எக்ஸாம் எழுதலாம். (அட்டம்ப்ட் அடிக்க காரணம் சொல்றான் பாரு) ஹவுஸ் சர்ஜன் பண்ணும் போது எனக்கு ரொம்ப சந்தோசமான விஷயம் மெஸ்ல மதியம் லெமன் ஜூஸ் இருக்கும். அன்லிமிட்டட். மினிமம் எட்டு கப் குடிப்போம். அதனாலேயே சரியா சாப்பிட முடியாது. பதினோரு மணிக்கே மெஸ் பக்கம் போயி 2 கப் குடிப்போம். திரும்ப 1 மணிக்கு சாப்பிட போகும் போது நாலு கப். அப்படியே ரெண்டு ரெண்டரை மணிக்கு போனா ஒரு 2 கப்.

         ஹவுஸ் சர்ஜன் முடிச்சு வந்து ரொம்ப நாள் லெமன் ஜூஸ் இல்லாம மதியம் லஞ்ச் சாப்பிட்டால் ஒரு திருப்தியே இருக்காது. எதோ ஒன்னு குறையுற மாதிரியே இருக்கும். அதுக்காகவே லெமன் ஜூஸ் குடிப்பேன். இப்பவும் என் கூட ஒரு மாசம் பழகுங்க. உங்களுக்கும் லெமன் ஜூஸ் குடிக்கிற பழக்கம் தொத்திகிரும்.



       லெமன்ல எக்கச்சக்க நல்ல விஷயம் இருக்கு. ஒரு எலுமிச்சம்பழத்துல 29 கலோரி இருக்கு. இதோட ஸ்பெஷல் உடனடியா உடலுக்கு சக்தி தரும். அதான் டையர்டா இருக்கும் போது லெமன் ஜூஸ் குடிச்சா உடனே ஒரு தெம்பு வருது. வைட்டமின் A,D,K, B complex அப்படின்னு எல்லா விட்டமினும் இதுல இருக்கு. முக்கியமா விட்டமின் C . ஒரே ஒரு எழுமிச்சம்பழம் கிட்டத்தட்ட நமக்கு ஒருநாள் பூரா தேவையான விட்டமின் C  முழுவதும் வழங்கும் திறன் படைத்தது.  இந்த விட்டமின்C-ய சாதாரணமா  நெனச்சுராதிங்க. இது ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப் பொருள் (Anti oxidant).  உடம்புல நெறைய free radicals சுத்திகிட்டே இருக்கும். இது எல்லாம் டி.என்.ஏ-வ  அட்டாக்   பண்ணி அவற்றை ஆக்சிஜனேற்றம் பண்ணி புற்று நோய் உண்டாக்கும். நம்ம விட்டமின் C  அந்த ஆக்சிஜனேற்றத்த தடுத்து புற்று நோய் வராம காப்பாற்றுகிறது. நம்ம எல்லாருக்கும் அடிக்கடி பயன்படுற தகவல் என்னனா விட்டமின் C  தான் சளிக்கு மருந்தாக பயன்படுகிறது. இது போக நெறய வேலை பாக்குது. functions of vitamin c அப்படின்னு லிஸ்ட் போட்டா  "போடா கூகிள் மண்டையா"னு திட்டிருவிங்க. அத அந்த மண்டையன்டயே கேட்டுக்கோங்க.
(இரும்புச் சத்து உடம்புல   சேர கூட உதவி பண்ணுது)

     சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மக்னிசியம், நார்ச்சத்து எல்லாமே இருக்கு. ஆனா  கொலஸ்டிரால் கொஞ்சம் கூட இல்ல. இதுல "Naringenin" அப்படின்னு ஒரு பொருள் இருக்கு. இந்த Naringenin  வயசாகுறத தடுக்குது. ஹெப்படிடிஸ் வைரசை எதிர்த்து சண்டை போடுது. வைட்டமின் C கூட சேர்ந்து டி.என்.ஏ சேதம் ஆகுறத  குறைக்குது. Naringenin என்ற நல்ல பையன் சிட்ரஸ் குடும்ப பழங்கள்ள அதிகமா இருக்கான்.  (மலையாளத்துல எழுமிச்ச்சம்பழத்துக்கு நாரிங்கா னு பேரு, தமிழ்ல கூட நார்த்தங்காய்ன்னு அதே குடும்ப காய்க்கு பேரு இருக்கு. Naringenin க்கும் இதுக்கும்  எதோ ஒற்றுமை இருக்க மாதிரி இல்ல?) 

      மனித குலத்தை மிரட்டுற பல நோய்கள்ள இருந்து காப்பத்துற சூப்பர் ஹீரோ லெமன் அப்படிலாம் தெரிஞ்சதுனால  அது எனக்கு பிடிச்சு போச்சுன்னு நெனைக்காதிங்க (கடைசியா ஹீரோ, ஹீரோயின பார்த்து  ஒரு டயலாக் சொல்வரே நான் லவ் பண்ணது உன் பணத்த இல்ல, உன்ன தான்னு அந்த மாதிரியா?)  லெமன் எனக்கு பிடிச்சதுக்கு நெறைய காரணம்.
1 . சின்ன வயசுல கிடைக்காத பொருள். அது தான் எனது ஈர்ப்புக்கு தொடக்கம், 
2 . ஒரு சின்ன பழம் எவ்ளோ ஜூஸ் கொடுக்குது அப்படின்னு ஆச்சரியம். (பெரிய ஆப்பிள், ஆரஞ்சு  பிழிஞ்சா கூட ஒரு கப் ஜூஸ் போட முடியாது. ஆனா ஒரு குட்டி எலுமிச்சம்பழம்  வச்சு ரெண்டு கப்  ஜூஸ் போடலாம்).
3 .  எல்லா சீசனிலும் எல்லா இடத்திலும் கிடைக்கிற எளிமை
4 . உப்பு போட்டா கூட சுவையா இருக்க இருக்குற ஒரே ஜூஸ். (சர்க்கரை நோயாளி கூட குடிக்கலாம்).
5 . எவ்வளவு டையர்டா இருந்தாலும் உடனடியா புத்துணர்ச்சி தருகிற திறமை,
6. உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் இருக்கு.
6. இது எல்லாத்துக்கும் மேல பாக்கெட்டுக்கு வேட்டு வைக்காத அன்பு,

       இப்ப சொல்லுங்க எனக்கு ஏன் லெமன் பிடிக்காது?

டிஸ்கி: புகை பிடிப்பவர்களுக்கு உடலில் free radicals அதிகமாக இருக்கும், புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு எலுமிச்சம்பழம் வரப்பிரசாதம்.

ஸ்ஸ்ஸ் அப்பா!!!! போஸ்ட் போட்டு டையர்ட் ஆயிடுச்சு. ஒரு லெமன் ஜூஸ் குடிச்சுட்டு வர்றேன்.

24 comments:

Chitra said...

உங்கள் போஸ்ட் வாசித்து முடித்ததும், எனக்கும் ரெண்டு கப் லெமன் ஜூஸ் குடிக்கணும் என்று தோன்றி விட்டது.... அப்படி நாவில் நீர் ஊற வைக்கிற அளவுக்கு சொல்லி இருக்கீங்க.... இதோ..... குடிக்க போறேனே.....!!! எங்கே லெமன்? எங்கே லெமன்?

Anonymous said...

லெமன் ஜூஸ் மட்டுமில்ல, "லெமன் சோடா சால்ட்"டும் செம சூப்பர்!

அலைகள் பாலா said...

@ Chitra said...

குடிங்க குடிங்க. உங்களுக்கும் தொத்திகிருச்சு... ஹா ஹா ஹா

அலைகள் பாலா said...

@ Balaji saravana said...

ஆமா சார், தாகமா இருக்கும் போது "லெமன் சோடா"க்கு இணை அது தான்.

பொன் மாலை பொழுது said...

ஒரு நல்ல செய்தியினை பகிர்ந்துகொண்ட இந்த டாக்டருக்கு நன்றி.
தொடர்ந்து எழுதுங்க.
--

அருண் பிரசாத் said...

so,சளி, ஜீரம் இருந்தாலும் லெமன் ஜீஸ் குடிக்கறது நல்லதுதானே டாக்டர்?

Unknown said...

நான் எப்பவும் லெமன் டீக்கு அடிமை பாலா ...

அலைகள் பாலா said...

@ கக்கு - மாணிக்கம் said...

நன்றி சார்.......

அலைகள் பாலா said...

//// அருண் பிரசாத் said...

so,சளி, ஜீரம் இருந்தாலும் லெமன் ஜீஸ் குடிக்கறது நல்லதுதானே டாக்டர்? ///

நிச்சயமா. சுத்தமான தண்ணீர்ல ஐஸ் போடாம குடிக்கலாம். தப்பே இல்ல.

அலைகள் பாலா said...

/// @@ Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

நான் எப்பவும் லெமன் டீக்கு அடிமை பாலா ...///

ஆமா அண்ணா. போஸ்ட் போட்ட பிறகு தான் லெமன் டீ, ஊறுகாய் மறந்த விசயமே நியாபகத்திற்கு வருது.

Anonymous said...

லெமன் சாதம் செய்ய சொல்லி வீட்ல அடமா பண்ணுவேன் டெய்லியும்னா அவங்க என்னதான் பண்ணூவாங்க பாவம்..எனக்கு பிடிச்ச லெமன்...சூப்பர் பதிவு

Anonymous said...

படங்களும் நாக்கில் நீர் ஊற செய்து விட்டன..சித்ரா சொன்னது மாதிரிஎங்கே லெமன்

அலைகள் பாலா said...

//லெமன் சாதம் செய்ய சொல்லி வீட்ல அடமா பண்ணுவேன் டெய்லியும்னா அவங்க என்னதான் பண்ணூவாங்க ///

ஹா ஹா ஹா நீங்களுமா?

சி.பி.செந்தில்குமார் said...

padhivu பதிவு பூரா லெமனா இருக்கே ,இதுக்கு மேட்சா லெமன் இடை அழகி தமனா ஸ்டில் வெச்சிருக்கலாமே?

நல்ல பதிவு சார்

குடுகுடுப்பை said...

லெமன், டக்கீலா உப்பு செம காம்பினேசன் சார்.

Unknown said...

நாளையிலிருந்து உப்பு போட்டு ஒரு லெமன் ஜூஸ் (நீங்கதான் சொல்லிட்டீங்களே டாக்டர்)
தகவலுக்கு நன்றி.

அலைகள் பாலா said...

//லெமன் இடை அழகி தமனா ///

புதுப் புது பேரா வைக்குறிங்களே

அலைகள் பாலா said...

///லெமன், டக்கீலா உப்பு செம காம்பினேசன் சார்.//

நோட் பண்ணுங்கப்பா!! நோட் பண்ணுங்கப்பா!!

அலைகள் பாலா said...

//நாளையிலிருந்து உப்பு போட்டு ஒரு லெமன் ஜூஸ் (நீங்கதான் சொல்லிட்டீங்களே டாக்டர்)
தகவலுக்கு நன்றி.///

தைரியமா குடிக்கலாம்...

சசிகுமார் said...

கலக்கல் பதிவு நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ramesh said...

//(வீட்டுக்கு தெரியாம லெமன் ஜூஸ், அவ்ளோ நல்லவனாடா?)

ஹ ஹ ஹ


//அதுக்கு சைட் டிஷ் எனக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு பொறியல்.


அட நம்மாளு நீங்க.. எனக்கும் ஃபிரைட் ரைசுக்கெல்லாம் புடிச்ச சைட் டிஷ் உருளைக் கிழங்கு பொறியல்தான்..

//1 . சின்ன வயசுல கிடைக்காத பொருள். அது தான் எனது ஈர்ப்புக்கு தொடக்கம்,
2 . ஒரு சின்ன பழம் எவ்ளோ ஜூஸ் கொடுக்குது அப்படின்னு ஆச்சரியம். (பெரிய ஆப்பிள், ஆரஞ்சு பிழிஞ்சா கூட ஒரு கப் ஜூஸ் போட முடியாது. ஆனா ஒரு குட்டி எலுமிச்சம்பழம் வச்சு ரெண்டு கப் ஜூஸ் போடலாம்).
3 . எல்லா சீசனிலும் எல்லா இடத்திலும் கிடைக்கிற எளிமை
4 . உப்பு போட்டா கூட சுவையா இருக்க இருக்குற ஒரே ஜூஸ். (சர்க்கரை நோயாளி கூட குடிக்கலாம்).
5 . எவ்வளவு டையர்டா இருந்தாலும் உடனடியா புத்துணர்ச்சி தருகிற திறமை,
6. உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் இருக்கு.
6. இது எல்லாத்துக்கும் மேல பாக்கெட்டுக்கு வேட்டு வைக்காத அன்பு,


பாயிண்டுகள் செம...

சித்ரா சொன்ன மாதிரி நாக்குல ஊற வெச்சிட்டீங்க.. எங்கெ லெமன்? எங்கே லெமன்?

மொக்கராசா said...

கலக்கிபுட்டங்க டாகுடரு, மேலிடத்தில் சொல்லி இனிமே தினமும் லெமன் ஜுஸ் தான் போங்க...................

THOPPITHOPPI said...

படிக்கும்போதே ஒரு லெமன் ஜூஸ் effect

Unknown said...

லெமன் சோடா நண்மைகள், தீமைகள் தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடம்பில் கிட்னி செயல் இழக்கும் எனப்படுகிறதே இதனால் உங்கள் கருத்து