அலைகள்
வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Tuesday, November 16, 2010
நமக்கும் ஒரு என்கவுண்டர்
செவ்வாய் கிழமை விடியும் போதே மழை பெய்துகொண்டே இருந்தது.... காலையில் இருந்து வெளியில் போகமுடியவில்லை. எதோ பக்கத்து வீட்டு புண்ணியத்துல அப்ப அப்ப சூடா தேநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது. மாலை நேரம் வடை சாப்பிடலாம் என முடிவு செய்து மலையாள சேச்சியின் வடை கடைக்கு சென்றோம் நானும் என் நண்பனும். சேச்சி ஒரு சின்ன பிளாஸ்டிக் தார்ப்பாயின் கீழ் அடுப்பை வைத்து, எங்களைப் போல மழைக்கு வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பல பேரின் ஆசைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.
அடுத்து நடந்தது தான் பெரிய காமெடி.. சேச்சியிடம் வடை ரெடி ஆகும் வரை மழையில் நனையாமல் இருக்க அருகில் இருந்த ஆட்டோவில் நானும் என் நண்பனும் உக்கார்ந்து இருந்தோம். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சிறுமி 10 வயது இருக்கும், டியுஷன் செல்வதற்காக வெளியில் வந்தாள். மணி ஐந்து தான் ஆகியிருந்தது. ஆனால் எழு மணி போல இருட்டியிருந்தது. தெருவில் யாரும் இல்லை.
அந்த பாப்பா மழையில் வெளியில் வருவதும், டியுஷன் போக மனம் இல்லாமல் மீண்டும் உள்ளே செல்வதுமாக இருந்தாள். உடனே எனக்கும் என் நண்பனுக்கும் பழைய கால சிந்தனைகள், நம்மலாம் அந்த காலத்துல எந்த டியுஷன்க்கு போனோம்? (அந்த காலம்னா உடனே பிளாக் அண்ட் ஒயிட்ல யோசிக்காதிங்க. நாங்களும் யூத் தான்) இன்னைக்கு ஒருநாளாவது பாப்பா சந்தோசமா இருக்கட்டும் என்று என் நண்பன் ஒரே ஒரு பொய் தாங்க சொன்னான். அது என்கவுண்டர் அளவு போகும்னு நெனைக்கவே இல்லைங்க...
"பாப்பா உனக்கு டியுஷன் இல்ல. லீவ் விட்டுடாங்க." இது தாங்க அந்த பொய். ஆனா அதுக்கு அந்த பாப்பா பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். அதன்பிறகு தான் நாங்கள் பண்ணிய தவறு நினைவுக்கு வந்தது. நாங்க ஒரு ஆட்டோவில் இருக்கோம், இருட்டு வேறு, மழை, தெருவில் யாரும் இல்லை. அப்போது அந்த பாப்பா ஐயோ கடத்துறாங்க என ஒரே ஒரு சவுண்ட் விட்டிருந்தால் எங்க நிலைமை என்ன ஆகிருக்கும்? மவனே உனக்கு என்கவுண்டர் தாண்டா.
ஆகவே மக்களே சாலையில் முன்பின் தெரியாத சிறு குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்.
டிஸ்கி: எந்த ஒரு முறைதவறுதலுக்கும் அதன் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக தான் லஞ்சம் நமது சமூகத்தில் முதன்முதலில் நுழைந்திருக்கும். ஆனால் இன்று டிராபிக் முதல் டெலிகாம் வரை புரையோடிப் புண்ணாகி நாறுகிறது. இதே போன்ற நிலைமை நாளை என்கவுண்டர்களுக்கும் வரலாம். தேன் எடுக்கும் போது புறங்கையை நக்கியவன் சும்மா இருக்க மாட்டான் என்பார்கள். கோவை என்கவுண்டர் முறைதவறுதலின் நியாயப்படுத்தப்பட்ட முதல்படி. புறங்கையை நக்கிவிட்டார்கள். இனி சும்மா இருப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Wednesday, October 27, 2010
ரெஃப்ரஷ் வித் லெமன்
பதிவுலகப் பக்கம் வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. (உன்ன யாரு தேடுனா? அப்படிலாம் கேட்டு நோகடிக்க கூடாது). பணி ரீதியில் இட மாற்றம், அதை தொடர்ந்து இணைய இணைப்பில் பிரச்சனை, புடுங்க வேண்டிய ஆணிகள் வேறு முள்ளம் பன்றி போல் சிலிர்த்துக் கொண்டு இருந்ததால் வரமுடியவில்லை. ஆனாலும் பதிவுகளை படித்துக் கொண்டு தான் இருந்தேன். ஒ.சி சிஸ்டத்தில் இருந்து பின்னூட்டம் போட முடியவில்லை. அதனால இப்ப என் பக்கத்த லெமன் வச்சு ரெஃப்ரஷ் பண்ணிக்கிறேன். படிங்க, உங்களுக்கும் இந்த மருத்துவ தகவல் பயனுள்ளதா இருக்கலாம்.
எனக்கும் லெமன்க்கும் இடையே பந்தம் சின்ன வயசுல இருந்தே தொடங்கிருச்சு. அப்ப எலுமிச்சம்பழம் எனக்கு தடை செய்யப்பட்ட பொருள். ஏனென்றால் எலுமிச்சம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமாம். (அது எவ்வளவு தவறான விஷயம் என்று இப்போது தெரிகிறது) தடை செய்யப்பட்டதாலேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு. "ஜூஸ் குடிச்சா தான சளி பிடிக்கும்? எனக்கு லெமன் சாதம் செஞ்சு குடுங்கன்னு" அறிவு பூர்வமா யோசிச்சு சாப்பிடுவேன். (நீ அப்ப இருந்தே இப்படி தானா?) எங்க அம்மா நெறைய லெமன பிழிஞ்சு தாழிச்சு எண்ணெய் நிறைய ஊற்றி செய்வாங்க பாருங்க சாப்பிட்டுக் கிட்டே இருக்கலாம். அதுக்கு சைட் டிஷ் எனக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு பொறியல். எங்கயாவது ஊருக்கு போகணும்னா "உனக்கு லெமன் சாதம் செஞ்சு வச்சுட்டு போறேன்பா" னு சொல்லி தான் என்ன சமாளிப்பாங்க.
இப்படியாக லெமன் சாதத்தில் தொடங்கிய பந்தம் கையில் மூன்று ரூபாய் கிடைத்தால் வீட்டுக்கு தெரியாமல் லெமன் ஜூஸ் குடிக்கும் அளவு வளர்ந்தது. (வீட்டுக்கு தெரியாம லெமன் ஜூஸ், அவ்ளோ நல்லவனாடா?) மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது பசங்க எல்லாம் ரோஸ்மில்க் அப்படின்னு கெத்தா ஆர்டர் பண்ணும் போது நான் மட்டும் லெமன் ஜூஸ் ஆர்டர் பண்ணுவேன். (சத்தியமா அப்ப ட்ரீட் எல்லாம் ஜூஸ் கடைல தான்).
அதன் பிறகு கல்லூரி வாழ்க்கை. மருத்துவ அறிவும் வளர ஆரம்பித்தது. முதல் வேலையாக லெமன் ஜூஸ் குடிச்சா சளி பிடிக்குமா அப்படின்னு பாட புத்தகத்துல தேடிப் பார்த்தேன். சீனியர்கள் கிட்ட கேட்டுப் பார்த்தேன். அப்ப தான் இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. உண்மை என்னனா எலுமிச்சம்பழத்தில் இருக்குற விட்டமின் c சளி வராம தடுக்கும் சக்தி கொண்டது. அடப்பாவிகளா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே அப்படின்னு ஒரே கவலை. அன்னைக்கே ஆசை தீர அஞ்சு லெமன் ஜூஸ் குடிச்சேன்.
எக்ஸாம் டைம்ல எங்களுக்கு உயிர் காக்கும் அமிர்தமே லெமன் ஜூஸ் தான்.( எங்களுக்கு -காலேஜ்ல ஒரு நாலு நாதாரி நம்ம கூட சுத்துமே எல்லாரையும் சேர்த்து). காலைல சாப்பிடாம எக்ஸாம்க்கு போய்ட்டு, முடிஞ்ச உடனே வண்டிய எடுத்துக்கிட்டு ஜூஸ் கடைல போயி ஒரே டைம்ல ரெண்டு லெமன் ஜூஸ் குடிச்சு கிட்டே கொஸ்டின் பேப்பர பத்தியும் அதுக்கு நம்ம விடையளித்த அழகையும் டிஸ்கஸ் பண்ணுனா ஒரு சுகம் இருக்கும் பாருங்க, அதுக்கே இன்னொரு தடவ எக்ஸாம் எழுதலாம். (அட்டம்ப்ட் அடிக்க காரணம் சொல்றான் பாரு) ஹவுஸ் சர்ஜன் பண்ணும் போது எனக்கு ரொம்ப சந்தோசமான விஷயம் மெஸ்ல மதியம் லெமன் ஜூஸ் இருக்கும். அன்லிமிட்டட். மினிமம் எட்டு கப் குடிப்போம். அதனாலேயே சரியா சாப்பிட முடியாது. பதினோரு மணிக்கே மெஸ் பக்கம் போயி 2 கப் குடிப்போம். திரும்ப 1 மணிக்கு சாப்பிட போகும் போது நாலு கப். அப்படியே ரெண்டு ரெண்டரை மணிக்கு போனா ஒரு 2 கப்.
ஹவுஸ் சர்ஜன் முடிச்சு வந்து ரொம்ப நாள் லெமன் ஜூஸ் இல்லாம மதியம் லஞ்ச் சாப்பிட்டால் ஒரு திருப்தியே இருக்காது. எதோ ஒன்னு குறையுற மாதிரியே இருக்கும். அதுக்காகவே லெமன் ஜூஸ் குடிப்பேன். இப்பவும் என் கூட ஒரு மாசம் பழகுங்க. உங்களுக்கும் லெமன் ஜூஸ் குடிக்கிற பழக்கம் தொத்திகிரும்.
லெமன்ல எக்கச்சக்க நல்ல விஷயம் இருக்கு. ஒரு எலுமிச்சம்பழத்துல 29 கலோரி இருக்கு. இதோட ஸ்பெஷல் உடனடியா உடலுக்கு சக்தி தரும். அதான் டையர்டா இருக்கும் போது லெமன் ஜூஸ் குடிச்சா உடனே ஒரு தெம்பு வருது. வைட்டமின் A,D,K, B complex அப்படின்னு எல்லா விட்டமினும் இதுல இருக்கு. முக்கியமா விட்டமின் C . ஒரே ஒரு எழுமிச்சம்பழம் கிட்டத்தட்ட நமக்கு ஒருநாள் பூரா தேவையான விட்டமின் C முழுவதும் வழங்கும் திறன் படைத்தது. இந்த விட்டமின்C-ய சாதாரணமா நெனச்சுராதிங்க. இது ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப் பொருள் (Anti oxidant). உடம்புல நெறைய free radicals சுத்திகிட்டே இருக்கும். இது எல்லாம் டி.என்.ஏ-வ அட்டாக் பண்ணி அவற்றை ஆக்சிஜனேற்றம் பண்ணி புற்று நோய் உண்டாக்கும். நம்ம விட்டமின் C அந்த ஆக்சிஜனேற்றத்த தடுத்து புற்று நோய் வராம காப்பாற்றுகிறது. நம்ம எல்லாருக்கும் அடிக்கடி பயன்படுற தகவல் என்னனா விட்டமின் C தான் சளிக்கு மருந்தாக பயன்படுகிறது. இது போக நெறய வேலை பாக்குது. functions of vitamin c அப்படின்னு லிஸ்ட் போட்டா "போடா கூகிள் மண்டையா"னு திட்டிருவிங்க. அத அந்த மண்டையன்டயே கேட்டுக்கோங்க.
(இரும்புச் சத்து உடம்புல சேர கூட உதவி பண்ணுது)
சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மக்னிசியம், நார்ச்சத்து எல்லாமே இருக்கு. ஆனா கொலஸ்டிரால் கொஞ்சம் கூட இல்ல. இதுல "Naringenin" அப்படின்னு ஒரு பொருள் இருக்கு. இந்த Naringenin வயசாகுறத தடுக்குது. ஹெப்படிடிஸ் வைரசை எதிர்த்து சண்டை போடுது. வைட்டமின் C கூட சேர்ந்து டி.என்.ஏ சேதம் ஆகுறத குறைக்குது. Naringenin என்ற நல்ல பையன் சிட்ரஸ் குடும்ப பழங்கள்ள அதிகமா இருக்கான். (மலையாளத்துல எழுமிச்ச்சம்பழத்துக்கு நாரிங்கா னு பேரு, தமிழ்ல கூட நார்த்தங்காய்ன்னு அதே குடும்ப காய்க்கு பேரு இருக்கு. Naringenin க்கும் இதுக்கும் எதோ ஒற்றுமை இருக்க மாதிரி இல்ல?)
மனித குலத்தை மிரட்டுற பல நோய்கள்ள இருந்து காப்பத்துற சூப்பர் ஹீரோ லெமன் அப்படிலாம் தெரிஞ்சதுனால அது எனக்கு பிடிச்சு போச்சுன்னு நெனைக்காதிங்க (கடைசியா ஹீரோ, ஹீரோயின பார்த்து ஒரு டயலாக் சொல்வரே நான் லவ் பண்ணது உன் பணத்த இல்ல, உன்ன தான்னு அந்த மாதிரியா?) லெமன் எனக்கு பிடிச்சதுக்கு நெறைய காரணம்.
1 . சின்ன வயசுல கிடைக்காத பொருள். அது தான் எனது ஈர்ப்புக்கு தொடக்கம்,
2 . ஒரு சின்ன பழம் எவ்ளோ ஜூஸ் கொடுக்குது அப்படின்னு ஆச்சரியம். (பெரிய ஆப்பிள், ஆரஞ்சு பிழிஞ்சா கூட ஒரு கப் ஜூஸ் போட முடியாது. ஆனா ஒரு குட்டி எலுமிச்சம்பழம் வச்சு ரெண்டு கப் ஜூஸ் போடலாம்).
3 . எல்லா சீசனிலும் எல்லா இடத்திலும் கிடைக்கிற எளிமை
4 . உப்பு போட்டா கூட சுவையா இருக்க இருக்குற ஒரே ஜூஸ். (சர்க்கரை நோயாளி கூட குடிக்கலாம்).
5 . எவ்வளவு டையர்டா இருந்தாலும் உடனடியா புத்துணர்ச்சி தருகிற திறமை,
6. உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் இருக்கு.
6. இது எல்லாத்துக்கும் மேல பாக்கெட்டுக்கு வேட்டு வைக்காத அன்பு,
இப்ப சொல்லுங்க எனக்கு ஏன் லெமன் பிடிக்காது?
டிஸ்கி: புகை பிடிப்பவர்களுக்கு உடலில் free radicals அதிகமாக இருக்கும், புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு எலுமிச்சம்பழம் வரப்பிரசாதம்.
ஸ்ஸ்ஸ் அப்பா!!!! போஸ்ட் போட்டு டையர்ட் ஆயிடுச்சு. ஒரு லெமன் ஜூஸ் குடிச்சுட்டு வர்றேன்.

Monday, September 27, 2010
காமன்வெல்த் பாடம்
கரை வேட்டியில்
கறை படாமல்
கரையில் நிற்பவன்
கையில் முத்து
காற்றிழுத்து
கடலுக்குள் மூழ்கி
காரிருளில்
கண்டேன் சிப்பியை
காசு சேர்க்க
கட்சிக்காரனா(நா)ய் இரு
காமன்வெல்த்
கற்றுத் தந்த பாடம்
Saturday, September 25, 2010
இன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு
அன்றும் அப்படி தான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தோம். வகுப்புக்குள் செல்லும் அனைவரும் எங்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும். என் நண்பர்கள் உள்ளே நுழையும் பெண்களை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். மத்த விஷயங்களில் பயங்கர சேட்டை செய்யும் நான் பெண்கள் என்றாலே ஓடி ஒளிவேன். சிறுவயதில் இருந்தே கூச்சம். அதனால் அமைதியாக இருந்தேன். அப்போது தான் அவள் வந்தாள். எங்களுக்கும் கரும்பலகைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் கரும்பலகையின் எழுத்துக்களை அழிக்கும்படி அதை ஒட்டி வந்தாள். அப்படி அவள் சென்றதில் இருந்தே அவளுக்கு எங்கள் மீது இருந்த பயம் புரிந்தது. வெள்ளை நிற சுடிதார், இரட்டை ஜடை போட்டிருந்தாள். பொதுவாக பள்ளியில் தான் இரட்டை ஜடை போட்டு வருவார்கள். இன்டர்மீடியேட் கல்லூரியில் இரட்டை ஜடை போட்டு வந்து நான் பார்த்தது இல்லை. என்னையும் மீறி "யார்டா இரட்டை ஜடை போட்ட ஸ்கூல் பொண்ண உள்ள விட்டது?" என்று உரக்க கூறி விட்டேன். சடாரென்று திரும்பினாள். கண்களில் கோவம் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அவள் முறைத்த உடனே நம்ம இரத்தத்தின் இரத்தங்களுக்கு இரத்தம் சூடாகிவிட்டது. "ஏய் என்ன முறைக்குற?" என்று எழுந்துவிட்டனர். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. விறு விறு என வகுப்புக்குள் சென்று விட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. விடுங்கடா, விடுங்கடா என அவர்களை சமாதானம் செய்தேன்.
என் நண்பர்களுக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை நான் எந்த பெண்ணையும் கண்டுகொண்டதே இல்லை. முதல் முறையாக ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளேன். அதுவும் அவள் முறைத்ததற்கு கோவம் வரவில்லை. இதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் தியேட்டரில் முறைத்தான் என்று லோக்கல் நெல்லூர்காரனிடம் சண்டைக்கு போய் போலிஸ் வந்து சமாதானப் படுத்தும் அளவு சென்றது. அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஹி ஹி ஹி என கேவலமாக சிரித்து வைத்தேன்.
மறுநாள் காலை ஏழு மணி இருக்கும். எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பல் துலக்கிக் கொண்டு இருந்தேன். திடீரென்று "டேய் சுமன் சீக்கிரம் வாடா, உன் ஆளு போறா" என்று பயங்கர சத்தமாக கத்தினான் நண்பன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக எட்டிப் பார்த்தேன். அவள் என் வீட்டின் வாசல் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். கரெக்டா நான் எட்டிப் பார்க்கும் நேரம் பார்த்து மாடியைப் பார்த்து விட்டாள். மீண்டும் ஒரு முறைப்பு. பிறகு தான் தெரிந்தது. எங்கள் தெருவின் இறுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் விடுதியில் தான் அவள் தங்கியிருக்கிறாள் என்று. தினமும் இந்த வழியாக தான் கல்லூரிக்கு வரவேண்டும். பிறகென்ன தினமும் ஏழு மணிக்கு மொட்டை மாடியில் இருந்து முறைப்பு தரிசனம் பெற்றேன். கொஞ்ச நாள் கழித்து சிறிது தைரியம் வந்த உடன் "கண்கள் இரண்டால்" ஜெய் போல மண்டையை ஆட்டிக் கொண்டே சிரித்தேன். சில நாட்கள் முறைப்பாள். சில நாட்கள் சிரிப்பாள்.
ஒருநாள் மொட்டை மாடியில் நின்று அவளை எதிர்பார்த்து வாயில் பிரஷுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு வரவில்லை. நான் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்தாள். ஆச்சர்யம். ஒரு ஜடை போட்டு அழகாக ரோஜாப்பூ வைத்திருந்தாள். மாடியைப் பார்த்துக் கொண்டே வந்தாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சைகையாலே சூப்பர் என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றினேன். அதன்பிறகு அவள் வேற வேற ஹேர் ஸ்டெயிலில் வருவதும் நான் மாடியில் இருந்து கமென்ட் தருவதும் தொடர்ந்தது.
ஒரு திங்கள் கிழமை. அவளுடன் அவள் வகுப்பிலேயே படிக்கும் மாணவன் ஒருவன் அவன் அம்மாவுடன் அன்று கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் என்ன விஷயமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்து விட்டோம். சிறிது நேரத்தில் இவள் பயங்கர கோவமாக வந்தாள். அதற்குள் விஷயம் வகுப்பிற்குள் பரவி விட்டது. அதாவது அவனுக்கு இவளை பிடித்து விட்டதாம், அவன் அம்மாவை வைத்து இவளிடம் பெண் கேட்டிருக்கிறான். நான் வேகமாக அவளிடம் சென்றேன்.
"அவன் என்ன சொன்னான்?"
"நீ ஏன் கேக்குற?"
"எனக்கு தான் கேக்க உரிமை இருக்கு" அந்த கோபத்திலும் அவள் முகத்தில் சிரிப்பு.
"என்ன கல்யாணம் பண்ணணுமாம்"
"நீ என்ன சொன்ன?"
"திட்டி விட்டுட்டேன்"
எனது முகத்தில் கோபம் குறைந்ததைக் கண்டு அவளும் சிரித்தாள்.
மீண்டும் எங்கள் மொட்டை மாடி சிரிப்பு தொடர்ந்தது. சிறிது நாட்களில் அண்ணனின் திருமணம் காரணமாக ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் வகுப்பிற்கு செல்லும் முன் பிரின்ஸ்பால் அறைக்கு சென்று இருந்தேன். உள்ளே அவள். தந்தையுடன். அழுது வீங்கிய முகம். எனக்கு ஒரே குழப்பம். நான் அவளிடம் "என்ன ஆச்சு?" என்றேன். "உனக்கு ஒன்றும் தெரியாதா? பேசாம போ" என்றாள். மிகுந்த கவலையுடன் வகுப்பிற்கு வந்தேன். பிறகு தான் தெரிந்தது அந்த பையன் அவனது அம்மாவுடன் இவள் வீட்டுக்கே சென்று விட்டான் என்று. அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அவள் கல்லூரிக்கு வரவில்லை.
மூன்று தினங்கள் கழித்து ஒரு மாலை நேரம். வீட்டின் வாசலில் கதையடித்துக் கொண்டு இருந்தோம். அவளது தந்தையுடன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அவள் வந்தாள். எங்கள் வீட்டின் அருகில் வந்ததும் என்னைப் பார்த்து நின்றாள். நானும் அருகில் சென்றேன். "நான் ஹைதராபாத் போறேன். அங்க ஒரு இன்டர்மீடியேட் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "ஓ.கே. ஆல் தி பெஸ்ட். நல்லா படி" என்றேன். அவள் தந்தையும் வரேன் தம்பி என்று விடை பெற்று கிளம்பினார். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள், கையை ஜடையில் வைத்துக் கொண்டே. அன்றும் இரட்டை ஜடை. எனக்கு பொல பொல வென கண்களில் நீர் வழிந்தது.
.
லேபிள்கள்:
சிறுகதை
Wednesday, September 22, 2010
இன்டர்மீடியேட் வயசு
இங்கு வந்து சேர்ந்த புதிதில் நெல்லூர் என்னை இவ்வளவு மயக்கும் என எதிர் பார்க்கவே இல்லை. அப்பாவிற்கு ஆந்திராவில் வங்கிப் பணி. கடப்பாவிற்கு அருகே ஒரு சிறு நகரத்தில் அப்போது இருந்தோம். அதை நகரம் என்று சொல்ல முடியாது. முழுவதும் பூசப் படாத வீடுகள், புழுதி பறக்கும் சாலைகள், எப்போதாவது வந்து செல்லும் ஓட்டை நகரப் பேருந்துகள், அழுக்கு படிந்த எனது பள்ளி தவிர வேறு எதையும் அறிந்தது இல்லை. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திடீரென்று ஒருநாள் "இன்டர்மீடியேட் படிக்க நெல்லூர் போறியா?" என கேட்டார்கள். நண்பர்கள் நெல்லூர் பற்றி மிகக் கவர்ச்சியான பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.அந்தக் கனவுகளோடு உடனே சரி சொன்னேன்.
இன்டர்மீடியேட் என்பது நம்ம ஊரில் +1, +2 போல. இரண்டு வருடம் படிக்க வேண்டும். அதன் பிறகு தான் கல்லூரியில் சேர முடியும். நம்ம ஊரில் ஈரோடு, சேலம் மாவட்டங்கள் பள்ளிகளுக்கு எப்படி புகழ் பெற்றவையோ அது போல ஆந்திராவில் நெல்லூர். வசதி இருப்பவர்கள் ஹைதராபாத் செல்வார்கள்.
ஆனால் நெல்லூர் வந்து சேர்ந்த பின் அதன் பிரம்மாண்டம் என்னை மிரட்டியது. யாரிடமும் பேசக் கூட பயமாக இருந்தது. முதல் மூன்று மாதங்களில் பலமுறை யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு ஓட முயற்சி செய்தேன். தனியாக போக பயமாக இருந்ததால் முயற்சி கைவிடப் பட்டது.
அங்கு விடுதிகள் வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் மாணவர்களை தங்க வைத்து விடுவர். தெருவின் கடைசியில் இருக்கும் வீடுகளை மொத்தமாக பிடித்து, அதில் மாணவிகள். அங்கு மட்டும் ஒரு காவலாளி இருப்பார். நான் இருந்த வீட்டில் மொத்தம் எட்டு பேர். முதல் நாள் பற்பசை கடனாக கேட்ட நண்பனுக்கு முறைத்துக் கொண்டே கொடுத்து விட்டு அதை வாங்கி திரும்ப பெட்டியில் பூட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இரண்டு வருடம் முடியும் போது எட்டு பேருக்கும் ஒரே சோப்பு தான் என்பது வேறு விஷயம்.
வந்த புதிதில் மறுநாளே தேர்வு இருப்பது போல வகுப்பு விட்டு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து விடுவேன். யாரிடமும் பேச கூச்சமாக இருக்கும். என் அறையில் இருக்கும் மற்றவர்களும் என்னிடம் அவ்வளவாக என்னிடம் பேச மாட்டார்கள். அவர்களுக்குள் நன்றாக பேசிக் கொள்வர். ஆனால் அது எல்லாம் மூன்று மாதம் தான். மூன்றாவது மாதம் ஒரு நாள். என் அறையில் ஒருவனுக்கு டைபாய்டு காய்ச்சல். கண் விழிக்க முடியாமல் படுத்துவிட்டான். அறை நண்பர்கள் அவனை கவனித்துக் கொண்ட விதம் என்னை பாதித்தது. வாந்தி எடுத்ததை கூட அருவருப்பின்றி சுத்தம் செய்தனர். இதுவரை வீடு மட்டுமே உலகம், வீட்டில் மட்டுமே பாசம் என்று நினைத்த என்னை இது ஏதோ செய்தது. மனிதர்களின் புதிய பரிமாணங்களை காட்டியது. வீட்டில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றுபவர்கள் என நினைத்திருந்த எனது நினைப்பில் மரண அடி. மெதுவாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். சாமியார் பேச ஆரம்பிக்கிறான் என அவர்களுக்கும் சந்தோசம். அப்படியே மெதுமெதுவாக ஆரம்பித்த நட்பு முஸ்தப்பா முஸ்தப்பா ரேஞ்சுக்கு சென்று விட்டது. அத்தனை நாள் எடுத்த சாமியார் பேரை ஒரே நாளில் மாற்ற வேண்டு என்பது போல சேட்டை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் காய் திருடுவது, வகுப்பை கட் அடித்தி விட்டு திருப்பதி, சென்னை என ஊர் சுற்றுவது, என நட்பின் இலக்கணத்திற்கு உரிய அனைத்தையும் செய்தோம். எங்கள் முயற்சி வீண் போக வில்லை. வெகு சீக்கிரத்தில் அந்த வீட்டு பசங்களா? உருப்புடாத பசங்க என்ற நல்ல பெயர் வந்து சேர்ந்தது. நண்பனுக்காக லோக்கல் நெல்லூர் வாலிபர்களிடம் சண்டைக்கு போய் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது இதில் மகுடம் வைக்கும் நிகழ்வு.
இப்படியாக இனிதே முதல் வருடம் நிறைவுற்றது. இரண்டாம் வருடம் வந்து விட்டோம். முதல் வருடம் வேறு மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். மொழிப் பாடங்களில் இருவருக்கும் சேர்ந்தே வகுப்பு நடக்கும். எங்கள் கோஷ்டியைப் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் எங்களிடம் பயத்துடனே ஜூனியர்கள் பழகுவார்கள். நாங்கள் முதல் பெஞ்சில் தான் அமர்வோம். வகுப்பை கவனிக்க அல்ல. டீச்சருக்கு டார்ச்சர் கொடுக்க. அது போல வகுப்பை விட்டு வெளியேறும் போதும் கடைசி பெஞ்ச்சை விட முதல் பெஞ்ச் தான் எளிது.
அன்றும் அப்படி முதல் பெஞ்சில் உக்காந்து இருந்த போது தான் அவள் வந்தாள். முதலில் பார்க்கும் போது பல்பு லாம் எரியவில்லை. ஆனால் அது தான் நான் வாங்கப் போகும் முதல் பல்பு என அப்போது தெரியவில்லை. தொடர்ச்சி அடுத்த பாகம்.....
டிஸ்கி: பதிவுலகில் நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று, அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்களது எழுத்து. அவரது தீராக் காதல் பாதிப்பில் உருவான புனைவு இது. இன்ஸ்பிரேஷன் என நான் சொல்லிக் கொண்டாலும் காப்பி காப்பி என யாரோ கத்துவது காதில் கேட்கிறது. பதிவுல இதுலாம் சாதாரணம்பா.
லேபிள்கள்:
சிறுகதை
Monday, September 20, 2010
தவறான மருத்துவத் தகவல்கள் , உயிரைப் பறிக்கும் ஆபத்து - கட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவுகள்.
தவறான மருத்துவப் பதிவுகள் பற்றிய பதிவில், எனது கோபம் தெரிகிறது என நண்பர்கள் கூறி இருந்தனர். அவரது ஒரு பதிவில் தான் முரண்பாடு என நினைக்கின்றனர். உண்மை அப்படி அல்ல. இதை பொறுமையாகப் படிக்கவும், நாம் ஏமாற்றப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு புரியும்.
அடிப்படை அறிவே இல்லாமல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில், எந்த ஒரு குறையும் இல்லாத மூன்று மாத குழந்தைக்கு விளக்கெண்ணெய், இன்னும் சில பொருட்களை கொடுத்து, intestinal oobstruction ஏற்பட்டு, அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி தெரியுமா? இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப் பட்டது. வாழ்நாள் முழுவதும் அரைக் குடலுடன் வாழப் போகும் அந்தக் குழந்தையின் முகத்த்தில் இவர்களால் விழிக்க இயலுமா?
சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவு இல்லை என்பவர்களே இதை என்ன சொல்வீர்கள்?
விளக்கெண்ணெயின் பக்க விளைவுகளைப் பற்றி அறிவீர்களா? அன்றாடம் உபயோகப்படுத்தும் மஞ்சளுக்கும் டைபாய்டு காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? உப்பில் இருந்து மிளகாய் வரை அனைத்துப் பொருட்களும் பக்க விளைவு கொண்டவை என்பது தெரியுமா?
ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையின் சுருக்கத் தமிழாக்கம் - "அறுபது வயது சர்க்கரை நோயாளி சாப்பிடாமல் சர்க்கரை குறை நிலைக்குச் சென்று சுயநினைவின்றி விழுந்துவிட்டார். அவரைக் காப்பற்ற சர்க்கரைக் கரைசலை வாயில் ஊற்றினார் அவரது மனைவி. (சுய நினைவின்றி இருப்பவருக்கு வாய் வழியே எதுவும் கொடுக்க கூடாது என்ற அடிப்படை மருத்துவ அறிவு எத்தனை பேருக்கு தெரியும்?) அது புரையேறி aspirated pneumonia உருவாகி அவரது உயிரைப் பறித்தது." இது போன்ற மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் சர்க்கரை நோயாளியை சாப்பிடாமல் உபவாசம் என்ற பெயரில் பட்டினி இருக்கச் சொல்வது எத்தனை பேரின் உயிரைப் பறிக்குமோ? இதெல்லாம் என்ன விளைவு வைத்தியரே? (குறைவான அளவு உணவை அடிக்கடி உண்பதே சர்க்கரை நோய்க்கு ஏற்றது என்பது நண்பருக்கு தெரியுமோ என்னவோ?)
உடலில் வியர்வை எப்படி உருவாகிறது என நெட்டில் படிக்கவும் நண்பரே. உடலில் இருந்து வெப்பம் வெளியேற முடியாத நிலையில் வியர்வை உற்பத்தி ஆகி வெப்பத்தை சமன் செய்கிறது. வியர்வையில் எவ்வளவு சோடியம், எவ்வளவு குளோரைடு உள்ளது என அனைத்தும் நெட்டில் கிடைக்கும். அறிவியல் இப்படி இருக்க வாழை இலையை சுற்றிக் கொண்டு படுத்தால் வியர்க்குமாம், கெட்ட நீர் வெளியேறுமாம். கேக்குறவன் கேனையனா இருந்தா வியர்வைல.....வேணாம், விட்ருங்க. சிமென்ட் சாக்கு தெரியுமா/ அதை கட்டிக் கொண்டு படுத்துப் பாருங்கள். இதைவிட அதிகமாக வேர்க்கும்.
வியர்வை எப்படி உருவாகும்? வியர்வையில் உள்ள பொருட்கள் என்ன? என்பது போன்ற அறிவியல் கருத்துகள் நிருபிக்கப்பட்ட பிறகும் "கெட்ட நீர் வெளியேறிவிட்டது" என்று மோசடி செய்யும் உங்களை என்னவென்று சொல்வது? இதற்குப் பெயர் தான் மருத்துவ அறிவை வளர்ப்பதா? (வெப்பம் கூடினால் சுரப்பி வியர்வையை சுரக்கும், மற்றபடி வாழை இழைக்கும், சிமென்ட் சாக்கிற்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது)
கரையான்களும், பாம்புகளும் எச்சமிட்ட புற்றுமண்ணை உடலில் பூசினால் இன்பெக்க்ஷன் வராதா? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களின் காயத்தில் மண் பட்டால் சீழ் பிடிக்காதா?
இங்கு அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. ஆயிரம் வருடங்களாக இருப்பதாலேயே கேள்விகள் இன்றி ஒத்துக் கொள்ள முடியாது. உடன்கட்டை ஏறுதல் கூட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்தது.
பால் சாப்பிட்டால் காம எண்ணம் தலை தூக்குமாம், நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி அடிகள் இறுதிவரை பால் தான் சாப்பிட்டார், அவருக்கும் தூக்கிக் கொண்டே இருந்ததோ காம எண்ணம்? உடலுக்கு தேவையான பெரும்பான்மை விட்டமின்கள் பாலில் இருக்கின்றன என்பது +2 மாணவர்களுக்கு கூட தெரிந்த நிலையில், நண்பருக்கு தெரியாதது சோகமே.(பாலைப் பற்றி பதிவுத் தொடரே எழுதலாம்) வைட்டமின் B12 பற்றி தெரியுமா? சைவ உணவு உண்பவர்களுக்கு B12 கிடைக்க ஒரே வழி பால் தான். நாசிசம் பாசிசம் போல food faddism ஆபத்தான விஷயம். தெரிந்தோ தெரியாமலோ அதைப் பரப்புகிறீர்கள் நண்பரே. இது போல சொல்லிக் கொண்டே போகலாம் நண்பரே.
மருத்துவப் பதிவுகளை எழுதுவதும் அவற்றைப் பற்றி கேட்டால், அந்த புத்தகத்தில் போட்டுருக்கு, எனக்கு தெரியாது என பொறுப்பை தட்டிக் கழிப்பதும் சரியான விஷயம் அல்ல நண்பரே. மற்ற உயிரை ம... ராக மதிக்கும் குணம்.
உண்மையிலேயே இயற்கை மருத்துவத்திற்கு நன்மை செய்ய நினைத்தால், அதை நான்கு பேருக்கு பரப்ப நினைத்தால், மூளை கட்டி குணமானதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள், நோபல் பரிசு வாங்கும் அளவு மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக அது இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்த நோட்டிசை மூவாயிரம் காப்பி பிரிண்ட் செய்த கர்நாடககாரருக்கு தங்கப் புதையல் கிடைத்தது, கிழித்துப் போட்டவர் இரத்தம் கக்கி செத்தார்" என்று வரும் பிட் நோட்டிஸ் போல ஆதாரம் இல்லாமல் ப்ளாக் எழுத வேண்டாம். எப்படி குணம் ஆனது என்று அறிவியல் ரீதியில் விளக்க முயன்றால் அது நல்ல விஷயம். இல்லையென்றால், பிரார்த்தனை கூட்டத்தில் கண் தெரியாதவருக்கு பார்வை கொடுக்கும் முறைக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.
மருத்துவ பதிவு எழுதும் முன், சில விசயங்களை யோசித்துக் கொள்ளுங்கள்,
அ) தாங்கள் கூற வந்தது சரியான கருத்தா?
ஆ) அதில் நம்பகத் தன்மை எவ்வளவு உள்ளது
இ) இதனால் மற்றவருக்கு துன்பம் வருமா?
ஈ) மருத்துவ அறிவு வளருமா?
உ) அதைப் பற்றி சந்தேகம் கேட்டால் நம்மால் விளக்க முடியுமா?
பதிவை எழுதும் முன் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு கேள்விக்கு பதில் வரவில்லை என்றாலும் எழுத வேண்டாம். பரபரப்புக்காக எழுத வேண்டும் என்றால் எந்திரன் பற்றி பதிவு எழுதி விட்டுப் போங்களேன். யாருக்கும் நஷ்டம் இல்லை. உங்களது பதிவால் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அந்தப் பாவம் உங்களையே சாரும்.
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், யார் என்ன சொன்னாலும் ஆ!!!!!! என்று கேட்காமல் அதன் உண்மை தன்மையை யோசியுங்கள். மருத்துவ சந்தேகங்களைப் பற்றி தகுதியான நபர்களிடம் விளக்கம் பெறவும். படித்தவர்களிடமே மருத்துவ அறியாமை பரவி உள்ள நிலையில் (kidneyக்கும் testisக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளக இருக்க ஊருண்னே இது) கருப்பை எடுத்தால் மாதவிலக்கு வரலாம் என்று காதில் பூ சுத்தலாம், வியர்வையில் கெட்ட நீர் வெளியேறும் என பூமாலையே சுற்றலாம்.
டிஸ்கி: இதில் நான் எந்த லிங்க்கும் கொடுக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ள வார்த்தைகளை நெட்டில் சர்ச் செய்து பாருங்கள். தேவைக்கு அதிகமாகவே விஷயம் கிடைக்கும்.

Sunday, September 19, 2010
கழுத்தைச் சுற்றிய பாம்பு - என்னது நானு யாரா-வின் தவறான மருத்துவத் தகவல்கள்
அன்பு நண்பர் வசந்த குமாருக்கு,
தங்களது "என்னது நானு யாரா?" வலைப்பக்கத்தைப் பார்த்தேன். அதில் உள்ள கருத்துகளின் அபத்தங்களை உங்களுக்கு தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. (எதிர் பதிவு போடும் அளவு நம்ம பெரிய ஆளு ஆயிட்டோம். என தாங்கள் சந்தோசப் படுவது எனக்குத் தெரிகிறது. "பெரிய ஆளு" ஆனதற்கு வாழ்த்துக்கள். ஹேப்பி வயசுக்கு வந்த டே)
மருத்துவ சம்பந்தமான பதிவுகள் அனைத்தையும் நான் படிக்காமல் விடுவதில்லை என்றாலும், உங்களது பதிவுகளை நான் படிப்பது இல்லை. காரணம், அவலில் தேங்காய் இட்டால் ரெசிப்பி , நாலு பழங்களை நறுக்கி போட்டால் சாலட் போன்ற யாருக்கும் தெரியாத விஷயங்களை நீங்கள் எழுதுவதைப் படித்ததில் இருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணம் தான். என்றாலும் உங்களது "அப்பாடி! மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க!" என்ற பதிவை படித்துப் பாருங்கள் முழுவதும் தவறான கருத்துகள் மக்களிடம் சேர்க்கப் பட்டிருக்கின்றன என என் நண்பர் கேட்டதால் படித்தேன். மிகுந்த அதிர்ச்சி.
பதிவுகளைப்
பாசிடிவ் பதிவுகள் (மக்களுக்கு தேவையான கருத்து உள்ளவை),
நியுட்ரல் பதிவுகள் (மொக்கை பொழுதுபோக்குப் பதிவுகள்),
நெகடிவ் பதிவுகள் (மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவை)
எனப் பிரித்தால், தங்களது அந்தப் பதிவு சத்தியமாக நெகடிவ் பதிவுகளுக்கு கீழ் வருகிறது.
அந்தப் பதிவின் ஆரம்பம் முதல் கடைசிவரை அனைத்தும் அபத்தம், அறியாமையின் உச்சம். கருப்பை நீக்கியவர்களுக்கு மாதவிடாய் எப்படி வரும் என்று கேட்டால் ஒரு லிங்க் கொடுத்தீர்கள். அது " Menstruation - Is it Really Necessary?". என்ற தலைப்பிலான கட்டுரை.(கேட்ட கேள்விக்கும் குடுத்த லிங்க்க்கும் என்ன ஒரு தொடர்பு) அதில் எந்த இடத்திலும் கருப்பை இல்லாதவர்களுக்கு மாதவிடாய் வரும் என்று குறிப்பிடவே இல்லை. மாதவிடாய் என்பதே கருப்பையில் இருந்து வெளியேறும் இரத்தம் தான். கருப்பை இல்லாமல் அது வர வாய்ப்பே இல்லை. நமது உடலைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் மருத்துவப் பதிவு எழுதும் தங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு பயாலஜி புக்கை பரிசாக அனுப்ப நினைத்துள்ளேன். (இந்த இடத்தில் டாக்டர் நீங்க +2 பாஸ் பண்ணீட்டிங்க காமெடி நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது) .
அந்தப் பதிவில்
"////1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.////"
என எழுதிருக்கீங்க.
நீங்கள் இங்கு குறிப்பிட்டு உள்ள "Ruptured ectopic pregnancy" -யின் முழு வீரியம் தெரியுமா? அந்த நோயாளியைப் பக்கத்தில பார்த்திருக்கிங்களா? உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆள் அவுட்.
ஆங்கில மருத்துவத்தில் இதைக் கண்டறிய ஸ்கேன் செய்து பார்ப்போம். ectopic pregnancy Rupture ஆகி விட்டது எனத் தெரிந்து விட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவோம். உங்கள் வைத்திய முறையில் எப்படி இதைக் கண்டு பிடிப்பீர்கள்? வெத்தலைல மை தடவியா? அப்படியே கண்டு பிடிச்சு என்ன பண்ணுவிங்க? வாழை இலைல சுத்தி படுக்க வச்சா சரி ஆகிடுமா? அநியாயமா ஏன் ஒரு உயிரை கொல்லப் பாக்குறிங்க?
சென்னை பொது மருத்துவமனையில் தினமும் ஒரு Ruptured ectopic pregnancy யாவது வருகிறது. உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர்களில் ஒரே ஒருவரை உங்கள் மருத்துவ முறையால் காப்பற்ற இயலுமா? ஒரு மணி நேரத்திற்குள் விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் ஒரு தாயின் உயிரை பறித்தவர் என்ற பழி வந்து சேரும். உடனடியாக நான் மருத்துவர் இல்லை என்று மேதாவியாக தப்பிக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் மருத்துவ முறையில் உள்ள மருத்துவர் யார் வேண்டுமானாலும் காப்பாற்றிக் கொடுக்கட்டும் பார்க்கலாம். உங்களால் முடியாது. தேவை இல்லாமல் அந்தத் தாய் தான் உயிரிழப்பார். ஓப்பனா கேக்குறேன். Ruptured ectopic pregnancy-க்கு அறுவை சிகிச்சை தப்புன்னு சொல்ற உங்க மருத்துவ முறை எப்படி இத சரி பண்ணி உயிரை காப்பாத்தும்?
உங்களது பதிவு ஏற்படுத்திய நச்சு விளைவை மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஒரு Ruptured ectopic pregnancy நோயாளி பதிவைப் படித்து விட்டு வெறும் பழம் மட்டும் சாப்பிடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளின் கதி என்ன? அந்தப் பாவம் முழுவதும் உங்களைச் சாரும்.
அறுவை சிகிச்சை பண்ணியதால சளி இருமல் வந்துச்சாம். இந்த பதிவ படிக்கிற மக்களே, உங்களுக்கு தெரிஞ்சு எத்தனையோ பேர் அறுவை சிகிச்சை பண்ணிருப்பாங்க. அல்லது நீங்களே பண்ணிருப்பிங்க. உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இருந்துகிட்டே இருக்கு? அறுவை சிகிச்சை பண்ணாத மக்களே உங்கள்ல எத்தனை பேருக்கு சளி இல்ல?
இப்படிப் பட்ட கருத்துக்கள் அறியாமையின் உச்சம். உங்களது அறியாமையை இப்படி பப்ளிக்கா காட்டாதிங்க.
அநோரேக்சியா நெர்வோசா (anorexia nervosa) பற்றி தெரியுமா? இளம்பெண்கள் குண்டாகக் கூடாதுன்னு சாப்பாட குறைச்சுடுவாங்க. அப்ப அவங்க உடம்புல சத்து குறைவால மாத விலக்கு வராம போய்டும். மாடலிங் துறையில் இருக்கும் இளம்பெண்களிடம் இருக்கும் வியாதி இது. நெட்ல படிச்சுப் பாருங்க. மூணு நாள் தூங்காம படிக்கலாம். அவ்ளோ மேட்டர் கிடைக்கும். நீங்க சொல்றதும் இது போல மன வியாதி தான். (பைத்தியம்னு சொல்வாங்களே அதுவா? அவ்வ்வ்வ்)
அடுத்த பதிவு இவரது வைத்திய முறையால் மூளைக் கட்டி குணம் ஆச்சாம். அந்த பதிவின் சாரம் இது தான். இவருக்கு தெரிந்த ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்ததாம்(8.2செ.மி நீளம்.). ஆங்கில வைத்திய முறையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்கள். நம்ம ஹீரோ அவரை ஒரு மாற்று மருத்துவமனையில் சேர்க்கிறார். அவருக்கு குணமாகி விட்டது. அதாவது அந்த மருத்துவர் உனக்கு சரியாகி விட்டது எனக் கூறுகிறார். (நன்றாக கவனிக்கவும். குணமடைந்ததிற்கு எந்த ஆதாரமும் இல்லை) அவ்ளோ தான். ஆனால் திரும்ப ஸ்கேன் எடுத்து பார்த்து கட்டி கரைந்து விட்டதா என உறுதி செய்ய மாட்டார். அதற்குள் முழுவதுமாக குணம் ஆகி விட்டதாக பதிவு போடுவார். இதில் ஒரு காமெடி என்ன தெரியுமா? அவர்கள் செய்தது symptomatic treatment. அதாவது நோயை குணப்படுத்தாமல் நோயின் வெளிப்பாடுகளை தீர்ப்பது. அதையே தான் ஹீரோ என்டரிக்கு முன்பு பாராசிட்டமால் செய்து வந்தது. என்ன...........? அதன் விலை எழுபத்தைந்து பைசா. ஹீரோ செய்த வைத்தியத்தின் விலை இருபது ஆயிரம். உங்க வைத்திய முறை ரொம்ப செலவு கம்மி தலைவரே. (பாவம் அந்த நோயாளி. என்னைக்கு அந்த கட்டி வெடிக்கப்போதோ? அதற்குள் ஸ்கேன் செய்து கட்டியின் தற்போதைய நிலையை கண்டறிந்து, அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.)
மருத்துவம் என்பது நீங்கள் விளையாட நினைக்கும் மைதானம் அல்ல. அது உயிர் காக்கும் தொழில். தப்புத் தவறாக தங்களுக்கு தெரிந்த அரைகுறை மருத்துவ விசயங்களை பதிவுகளாகப் போட்டு, பலரின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாம். சரியாகத் தெரிந்தால் போடுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள். அது தான் மிகப் பெரியத் தொண்டு.
உங்களது முதல் பதிவிலேயே நான் மருத்துவன் இல்லை எனக் கூறிய தாங்கள், சிரிப்பு போலிஸ் அவர்களது பதிவின் பின்னூட்டத்தில்
///
ஆங்கில மருத்துவம் கொல்கிறது என் வரிக்கு வரி சொல்லும் உங்கள் பதிவில் இரத்தக் கொடை, கண் தானம் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. எப்ப பங்காளி இயற்கை வைத்தியத்தில இரத்தம் ஏற்றுவதையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்த்தாங்க? ஏன் பங்காளி இரட்டை வேடம்?
ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் அளித்து இருந்தேனே. அதைப் பற்றி தங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லையே.
உங்களது பதிவு மருத்துவ அறிவை வளர்க்கவில்லை. அறியாமையை தான் வளர்க்கிறது. அதில் உள்ள அபத்தங்களை இது போல பட்டியல் இட்டுக் கொண்டே சென்றால் படிப்பவர்களுக்கு மூச்சு முட்டிவிடும். அதனால் இத்துடன் முடிக்கிறேன். நீங்கள் கூற வந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும் கருத்துகள் சரி இல்லை. எனவே வேண்டாம். விட்ருங்க.
ஆன்மீகத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் ஒன்றும் கேட்க மாட்டேன், ஏனென்றால் அது எனக்கு தெரியாது, அது எனக்கு பிடிக்காது, அது எனக்கு தேவை இல்லை. ஆனால் மருத்துவத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதினால் எனக்கு கட்டாயம் கோவம் வரும், ஏனென்றால், அது எனக்குத் தெரியும், அது எனக்கு பிடிக்கும், அது எனக்கு தேவையான விஷயம்.
தாங்கள் எப்போதும் போல, "அவலில் தேங்காய் போட்டு செய்யும் ரெசிப்பிகள்", "பழத்தை நறுக்கிப் போட்டால் சாலட்" போன்ற யாருக்கும் தெரியாத விசயங்களை எழுதிக் கொண்டு இருங்கள். தேவை இல்லாமல் மருத்துவ கருத்து என்ற பெயரில் கீரை விற்க வேண்டாம். இன்னொரு சேலம் சித்த மருத்துவராக, மான்கறி விஜயகுமாராக உருவாக வேண்டாம். அது பலரின் வாழ்கையைப் பாதிக்கும்.
உங்க பாணியிலேயே பதில் சொல்வதானால், பங்காளி உங்க சரக்கு எல்லாம் சரி இல்ல. டூப்ளிகேட். கள்ள சாராயம். வேணாம் விக்காதீங்க.
டிஸ்கி: நண்பரே! உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. இது கருத்து மோதலே.

- என்னது நானு யாரா? சொன்னது…
- //யாராவது அடிக்க வந்தா என்னை காப்பாத்திகிறதுக்கு ஏதாச்சும் இயற்க்கை வைத்தியம் உண்டா பங்காளி?// //தெரியாதுன்னு சொல்லுங்க. முடியாதுன்னு சொல்லாதிங்க. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட வந்து மாட்டிக்கிட்டனே(ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?)// போலி டாக்டரு இல்ல! ஜாலி டாக்டரு! ஒருத்தரு அடிப்பட்டா, ஒரு பேஷண்ட் எனக்கு கிடைக்கும் இல்ல! அதனால நான் ஜாலி டாக்டரு! அடிப்படறதுக்கு பயம்னா பேசாம எதிர் கட்சி ஆளுங்க கிட்ட சரண்டர் ஆக வேண்டியது தானே?
- 17 செப்டெம்ப்ர், 2010 10:03 am /////
ஆங்கில மருத்துவம் கொல்கிறது என் வரிக்கு வரி சொல்லும் உங்கள் பதிவில் இரத்தக் கொடை, கண் தானம் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. எப்ப பங்காளி இயற்கை வைத்தியத்தில இரத்தம் ஏற்றுவதையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையையும் சேர்த்தாங்க? ஏன் பங்காளி இரட்டை வேடம்?
ஆங்கில மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் அளித்து இருந்தேனே. அதைப் பற்றி தங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லையே.
உங்களது பதிவு மருத்துவ அறிவை வளர்க்கவில்லை. அறியாமையை தான் வளர்க்கிறது. அதில் உள்ள அபத்தங்களை இது போல பட்டியல் இட்டுக் கொண்டே சென்றால் படிப்பவர்களுக்கு மூச்சு முட்டிவிடும். அதனால் இத்துடன் முடிக்கிறேன். நீங்கள் கூற வந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும் கருத்துகள் சரி இல்லை. எனவே வேண்டாம். விட்ருங்க.
ஆன்மீகத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள், நான் ஒன்றும் கேட்க மாட்டேன், ஏனென்றால் அது எனக்கு தெரியாது, அது எனக்கு பிடிக்காது, அது எனக்கு தேவை இல்லை. ஆனால் மருத்துவத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதினால் எனக்கு கட்டாயம் கோவம் வரும், ஏனென்றால், அது எனக்குத் தெரியும், அது எனக்கு பிடிக்கும், அது எனக்கு தேவையான விஷயம்.
தாங்கள் எப்போதும் போல, "அவலில் தேங்காய் போட்டு செய்யும் ரெசிப்பிகள்", "பழத்தை நறுக்கிப் போட்டால் சாலட்" போன்ற யாருக்கும் தெரியாத விசயங்களை எழுதிக் கொண்டு இருங்கள். தேவை இல்லாமல் மருத்துவ கருத்து என்ற பெயரில் கீரை விற்க வேண்டாம். இன்னொரு சேலம் சித்த மருத்துவராக, மான்கறி விஜயகுமாராக உருவாக வேண்டாம். அது பலரின் வாழ்கையைப் பாதிக்கும்.
உங்க பாணியிலேயே பதில் சொல்வதானால், பங்காளி உங்க சரக்கு எல்லாம் சரி இல்ல. டூப்ளிகேட். கள்ள சாராயம். வேணாம் விக்காதீங்க.
டிஸ்கி: நண்பரே! உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. இது கருத்து மோதலே.
Subscribe to:
Posts (Atom)