வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....
வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Saturday, September 25, 2010
இன்டர்மீடியேட் வயசு - பாகம் இரண்டு
அன்றும் அப்படி தான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தோம். வகுப்புக்குள் செல்லும் அனைவரும் எங்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும். என் நண்பர்கள் உள்ளே நுழையும் பெண்களை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். மத்த விஷயங்களில் பயங்கர சேட்டை செய்யும் நான் பெண்கள் என்றாலே ஓடி ஒளிவேன். சிறுவயதில் இருந்தே கூச்சம். அதனால் அமைதியாக இருந்தேன். அப்போது தான் அவள் வந்தாள். எங்களுக்கும் கரும்பலகைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் கரும்பலகையின் எழுத்துக்களை அழிக்கும்படி அதை ஒட்டி வந்தாள். அப்படி அவள் சென்றதில் இருந்தே அவளுக்கு எங்கள் மீது இருந்த பயம் புரிந்தது. வெள்ளை நிற சுடிதார், இரட்டை ஜடை போட்டிருந்தாள். பொதுவாக பள்ளியில் தான் இரட்டை ஜடை போட்டு வருவார்கள். இன்டர்மீடியேட் கல்லூரியில் இரட்டை ஜடை போட்டு வந்து நான் பார்த்தது இல்லை. என்னையும் மீறி "யார்டா இரட்டை ஜடை போட்ட ஸ்கூல் பொண்ண உள்ள விட்டது?" என்று உரக்க கூறி விட்டேன். சடாரென்று திரும்பினாள். கண்களில் கோவம் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. அவள் முறைத்த உடனே நம்ம இரத்தத்தின் இரத்தங்களுக்கு இரத்தம் சூடாகிவிட்டது. "ஏய் என்ன முறைக்குற?" என்று எழுந்துவிட்டனர். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. விறு விறு என வகுப்புக்குள் சென்று விட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. விடுங்கடா, விடுங்கடா என அவர்களை சமாதானம் செய்தேன்.
என் நண்பர்களுக்கோ பயங்கர ஆச்சரியம். அதுவரை நான் எந்த பெண்ணையும் கண்டுகொண்டதே இல்லை. முதல் முறையாக ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளேன். அதுவும் அவள் முறைத்ததற்கு கோவம் வரவில்லை. இதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் தியேட்டரில் முறைத்தான் என்று லோக்கல் நெல்லூர்காரனிடம் சண்டைக்கு போய் போலிஸ் வந்து சமாதானப் படுத்தும் அளவு சென்றது. அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஹி ஹி ஹி என கேவலமாக சிரித்து வைத்தேன்.
மறுநாள் காலை ஏழு மணி இருக்கும். எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பல் துலக்கிக் கொண்டு இருந்தேன். திடீரென்று "டேய் சுமன் சீக்கிரம் வாடா, உன் ஆளு போறா" என்று பயங்கர சத்தமாக கத்தினான் நண்பன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக எட்டிப் பார்த்தேன். அவள் என் வீட்டின் வாசல் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். கரெக்டா நான் எட்டிப் பார்க்கும் நேரம் பார்த்து மாடியைப் பார்த்து விட்டாள். மீண்டும் ஒரு முறைப்பு. பிறகு தான் தெரிந்தது. எங்கள் தெருவின் இறுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் விடுதியில் தான் அவள் தங்கியிருக்கிறாள் என்று. தினமும் இந்த வழியாக தான் கல்லூரிக்கு வரவேண்டும். பிறகென்ன தினமும் ஏழு மணிக்கு மொட்டை மாடியில் இருந்து முறைப்பு தரிசனம் பெற்றேன். கொஞ்ச நாள் கழித்து சிறிது தைரியம் வந்த உடன் "கண்கள் இரண்டால்" ஜெய் போல மண்டையை ஆட்டிக் கொண்டே சிரித்தேன். சில நாட்கள் முறைப்பாள். சில நாட்கள் சிரிப்பாள்.
ஒருநாள் மொட்டை மாடியில் நின்று அவளை எதிர்பார்த்து வாயில் பிரஷுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு வரவில்லை. நான் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்தாள். ஆச்சர்யம். ஒரு ஜடை போட்டு அழகாக ரோஜாப்பூ வைத்திருந்தாள். மாடியைப் பார்த்துக் கொண்டே வந்தாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சைகையாலே சூப்பர் என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள். அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றினேன். அதன்பிறகு அவள் வேற வேற ஹேர் ஸ்டெயிலில் வருவதும் நான் மாடியில் இருந்து கமென்ட் தருவதும் தொடர்ந்தது.
ஒரு திங்கள் கிழமை. அவளுடன் அவள் வகுப்பிலேயே படிக்கும் மாணவன் ஒருவன் அவன் அம்மாவுடன் அன்று கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் என்ன விஷயமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்து உட்கார்ந்து விட்டோம். சிறிது நேரத்தில் இவள் பயங்கர கோவமாக வந்தாள். அதற்குள் விஷயம் வகுப்பிற்குள் பரவி விட்டது. அதாவது அவனுக்கு இவளை பிடித்து விட்டதாம், அவன் அம்மாவை வைத்து இவளிடம் பெண் கேட்டிருக்கிறான். நான் வேகமாக அவளிடம் சென்றேன்.
"அவன் என்ன சொன்னான்?"
"நீ ஏன் கேக்குற?"
"எனக்கு தான் கேக்க உரிமை இருக்கு" அந்த கோபத்திலும் அவள் முகத்தில் சிரிப்பு.
"என்ன கல்யாணம் பண்ணணுமாம்"
"நீ என்ன சொன்ன?"
"திட்டி விட்டுட்டேன்"
எனது முகத்தில் கோபம் குறைந்ததைக் கண்டு அவளும் சிரித்தாள்.
மீண்டும் எங்கள் மொட்டை மாடி சிரிப்பு தொடர்ந்தது. சிறிது நாட்களில் அண்ணனின் திருமணம் காரணமாக ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தேன். மீண்டும் வகுப்பிற்கு செல்லும் முன் பிரின்ஸ்பால் அறைக்கு சென்று இருந்தேன். உள்ளே அவள். தந்தையுடன். அழுது வீங்கிய முகம். எனக்கு ஒரே குழப்பம். நான் அவளிடம் "என்ன ஆச்சு?" என்றேன். "உனக்கு ஒன்றும் தெரியாதா? பேசாம போ" என்றாள். மிகுந்த கவலையுடன் வகுப்பிற்கு வந்தேன். பிறகு தான் தெரிந்தது அந்த பையன் அவனது அம்மாவுடன் இவள் வீட்டுக்கே சென்று விட்டான் என்று. அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அவள் கல்லூரிக்கு வரவில்லை.
மூன்று தினங்கள் கழித்து ஒரு மாலை நேரம். வீட்டின் வாசலில் கதையடித்துக் கொண்டு இருந்தோம். அவளது தந்தையுடன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அவள் வந்தாள். எங்கள் வீட்டின் அருகில் வந்ததும் என்னைப் பார்த்து நின்றாள். நானும் அருகில் சென்றேன். "நான் ஹைதராபாத் போறேன். அங்க ஒரு இன்டர்மீடியேட் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "ஓ.கே. ஆல் தி பெஸ்ட். நல்லா படி" என்றேன். அவள் தந்தையும் வரேன் தம்பி என்று விடை பெற்று கிளம்பினார். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தாள், கையை ஜடையில் வைத்துக் கொண்டே. அன்றும் இரட்டை ஜடை. எனக்கு பொல பொல வென கண்களில் நீர் வழிந்தது.
.
லேபிள்கள்:
சிறுகதை
Wednesday, September 22, 2010
இன்டர்மீடியேட் வயசு
இங்கு வந்து சேர்ந்த புதிதில் நெல்லூர் என்னை இவ்வளவு மயக்கும் என எதிர் பார்க்கவே இல்லை. அப்பாவிற்கு ஆந்திராவில் வங்கிப் பணி. கடப்பாவிற்கு அருகே ஒரு சிறு நகரத்தில் அப்போது இருந்தோம். அதை நகரம் என்று சொல்ல முடியாது. முழுவதும் பூசப் படாத வீடுகள், புழுதி பறக்கும் சாலைகள், எப்போதாவது வந்து செல்லும் ஓட்டை நகரப் பேருந்துகள், அழுக்கு படிந்த எனது பள்ளி தவிர வேறு எதையும் அறிந்தது இல்லை. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திடீரென்று ஒருநாள் "இன்டர்மீடியேட் படிக்க நெல்லூர் போறியா?" என கேட்டார்கள். நண்பர்கள் நெல்லூர் பற்றி மிகக் கவர்ச்சியான பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.அந்தக் கனவுகளோடு உடனே சரி சொன்னேன்.
இன்டர்மீடியேட் என்பது நம்ம ஊரில் +1, +2 போல. இரண்டு வருடம் படிக்க வேண்டும். அதன் பிறகு தான் கல்லூரியில் சேர முடியும். நம்ம ஊரில் ஈரோடு, சேலம் மாவட்டங்கள் பள்ளிகளுக்கு எப்படி புகழ் பெற்றவையோ அது போல ஆந்திராவில் நெல்லூர். வசதி இருப்பவர்கள் ஹைதராபாத் செல்வார்கள்.
ஆனால் நெல்லூர் வந்து சேர்ந்த பின் அதன் பிரம்மாண்டம் என்னை மிரட்டியது. யாரிடமும் பேசக் கூட பயமாக இருந்தது. முதல் மூன்று மாதங்களில் பலமுறை யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு ஓட முயற்சி செய்தேன். தனியாக போக பயமாக இருந்ததால் முயற்சி கைவிடப் பட்டது.
அங்கு விடுதிகள் வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் மாணவர்களை தங்க வைத்து விடுவர். தெருவின் கடைசியில் இருக்கும் வீடுகளை மொத்தமாக பிடித்து, அதில் மாணவிகள். அங்கு மட்டும் ஒரு காவலாளி இருப்பார். நான் இருந்த வீட்டில் மொத்தம் எட்டு பேர். முதல் நாள் பற்பசை கடனாக கேட்ட நண்பனுக்கு முறைத்துக் கொண்டே கொடுத்து விட்டு அதை வாங்கி திரும்ப பெட்டியில் பூட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இரண்டு வருடம் முடியும் போது எட்டு பேருக்கும் ஒரே சோப்பு தான் என்பது வேறு விஷயம்.
வந்த புதிதில் மறுநாளே தேர்வு இருப்பது போல வகுப்பு விட்டு வந்தவுடன் படிக்க ஆரம்பித்து விடுவேன். யாரிடமும் பேச கூச்சமாக இருக்கும். என் அறையில் இருக்கும் மற்றவர்களும் என்னிடம் அவ்வளவாக என்னிடம் பேச மாட்டார்கள். அவர்களுக்குள் நன்றாக பேசிக் கொள்வர். ஆனால் அது எல்லாம் மூன்று மாதம் தான். மூன்றாவது மாதம் ஒரு நாள். என் அறையில் ஒருவனுக்கு டைபாய்டு காய்ச்சல். கண் விழிக்க முடியாமல் படுத்துவிட்டான். அறை நண்பர்கள் அவனை கவனித்துக் கொண்ட விதம் என்னை பாதித்தது. வாந்தி எடுத்ததை கூட அருவருப்பின்றி சுத்தம் செய்தனர். இதுவரை வீடு மட்டுமே உலகம், வீட்டில் மட்டுமே பாசம் என்று நினைத்த என்னை இது ஏதோ செய்தது. மனிதர்களின் புதிய பரிமாணங்களை காட்டியது. வீட்டில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றுபவர்கள் என நினைத்திருந்த எனது நினைப்பில் மரண அடி. மெதுவாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். சாமியார் பேச ஆரம்பிக்கிறான் என அவர்களுக்கும் சந்தோசம். அப்படியே மெதுமெதுவாக ஆரம்பித்த நட்பு முஸ்தப்பா முஸ்தப்பா ரேஞ்சுக்கு சென்று விட்டது. அத்தனை நாள் எடுத்த சாமியார் பேரை ஒரே நாளில் மாற்ற வேண்டு என்பது போல சேட்டை செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் காய் திருடுவது, வகுப்பை கட் அடித்தி விட்டு திருப்பதி, சென்னை என ஊர் சுற்றுவது, என நட்பின் இலக்கணத்திற்கு உரிய அனைத்தையும் செய்தோம். எங்கள் முயற்சி வீண் போக வில்லை. வெகு சீக்கிரத்தில் அந்த வீட்டு பசங்களா? உருப்புடாத பசங்க என்ற நல்ல பெயர் வந்து சேர்ந்தது. நண்பனுக்காக லோக்கல் நெல்லூர் வாலிபர்களிடம் சண்டைக்கு போய் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது இதில் மகுடம் வைக்கும் நிகழ்வு.
இப்படியாக இனிதே முதல் வருடம் நிறைவுற்றது. இரண்டாம் வருடம் வந்து விட்டோம். முதல் வருடம் வேறு மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். மொழிப் பாடங்களில் இருவருக்கும் சேர்ந்தே வகுப்பு நடக்கும். எங்கள் கோஷ்டியைப் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் எங்களிடம் பயத்துடனே ஜூனியர்கள் பழகுவார்கள். நாங்கள் முதல் பெஞ்சில் தான் அமர்வோம். வகுப்பை கவனிக்க அல்ல. டீச்சருக்கு டார்ச்சர் கொடுக்க. அது போல வகுப்பை விட்டு வெளியேறும் போதும் கடைசி பெஞ்ச்சை விட முதல் பெஞ்ச் தான் எளிது.
அன்றும் அப்படி முதல் பெஞ்சில் உக்காந்து இருந்த போது தான் அவள் வந்தாள். முதலில் பார்க்கும் போது பல்பு லாம் எரியவில்லை. ஆனால் அது தான் நான் வாங்கப் போகும் முதல் பல்பு என அப்போது தெரியவில்லை. தொடர்ச்சி அடுத்த பாகம்.....
டிஸ்கி: பதிவுலகில் நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று, அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்களது எழுத்து. அவரது தீராக் காதல் பாதிப்பில் உருவான புனைவு இது. இன்ஸ்பிரேஷன் என நான் சொல்லிக் கொண்டாலும் காப்பி காப்பி என யாரோ கத்துவது காதில் கேட்கிறது. பதிவுல இதுலாம் சாதாரணம்பா.
லேபிள்கள்:
சிறுகதை
Saturday, August 28, 2010
கொடூரம்
காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வாளர்களுக்கு அவசர கடிதம் வந்தது. அது தாங்கி வந்த செய்தி "நகரில் பெருகி வரும் வாகன விபத்துகளை குறைக்க ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்". அனைவரும் அது சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை, வேறு வேறு எண்ணங்கள்.. "இது மாதிரி 1000 மீட்டிங் போட்டாச்சு. நோ யூஸ்", "நம்ம ஏரியால தான் ஆக்ஸிடன்ட் நிறைய நடந்துருக்கு, என்ன ஆகுமோ", "டிரங்கன் டிரைவ் பிடிக்காம விட்டோமே, அத கேட்பாரோ?" "ஒருவேளை ஹெல்மெட் போடுறத ஸ்ட்ரிக்ட் பண்ண போறாரோ?" "மீட்டிங் முடிஞ்ச உடனே சாப்பாடு இருக்குமா?" அந்த இடமே mind voice-ன் இரைச்சலால் நிரம்பி நிசப்தமாய் இருந்தது. ஆணையாளர் நுழையும் போதே அனைவரின் எண்ண ஓட்டத்தையும் ஊகித்துக் கொண்டே வந்தார்.
" ஆக்சிடன்ட் குறைய நீங்க நினைக்குற மாதிரி ஹெல்மெட் போடுறது, டிரங்கன் டிரைவ் பிடிக்குறது, இதெல்லாம் பழசு. ஏற்கனவே ட்ரை பண்ணி பெருசா எதுவும் ரிசல்ட் இல்ல. இப்போ புதுசா ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்?"
ஆய்வாளர்களிடம் நீண்ட மௌனம். சிறிது தயக்கத்திற்குப் பிறகு ஒருவர் "சார், எல்லா இடத்துலயும் செக்கிங் ஸ்ட்ரிக்ட் பண்ணலாம் சார். பைன் நிறைய போடலாம்."
ஆணையாளர் சிரித்து விட்டார். "ஹா ஹா ஹா. எங்க வர்றீங்கனு புரியுது. இது எலெக்சன் டைம். அப்படி பண்ண வேணாம்னு மேலிட உத்தரவு." அதற்கு அடுத்து யாரும் வாயை திறக்கவில்லை.
"ஒ.கே. நானே ஒரு ஐடியா சொல்றேன்." ஆணையாளர் தொடர்ந்தார். "ஒரு விபத்த பாத்த கொஞ்ச நேரத்துக்கு கவனமா ஓட்டுறது மனித இயல்பு. அதுனால சிட்டில முக்கியமான இடங்கள்ல எல்லார் கண்ணுலயும் படுற மாதிரி ஏற்கனவே நடந்த விபத்துகளோட போட்டோஸ் பெருசா வைப்போம். இது மக்களுக்கும் தொந்தரவு இல்ல. ஒரு புது முயற்சியா இருக்கும்."
"நம்ம வைக்குற போட்டோ கொடூரமா இருக்கணும். அத பாத்துட்டு யாரும் வேகமா போகவே கூடாது. இங்க இருக்குற போட்டோஸ்ல ஒன்ன செலக்ட் பண்ணுங்க. இதெல்லாம் சிட்டில போன வருஷம் நடந்த விபத்துகளில் எடுக்கப்பட்ட்டது ."
அனைவரும் ஒருமனதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தனர். லாரி சக்கரத்தின் கீழ் தலை நசுங்கி இறந்த ஒருவனுடைய போட்டோ. அவன் வந்த பைக் உருக்குலைந்து அருகில் கிடந்தது. பார்க்கவே கொடூரமாக இருந்தது.
"இந்த போட்டோ எல்லாருக்கும் ஒ.கே தான? சிட்டிக்கு உள்ள டிரைவ் பண்ற யாரும் இந்த போட்டோவ பாக்காம போக கூடாது. பாக்குற யாரும் டிரைவ் பண்ண பயப்படனும். அப்படி எல்லா இடத்துலயும் இத பெருசா வைங்க" ஆணையாளர் அவருக்கே உரிய கட்டை குரலில் கூறினார்.
இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மட்டும் மெதுவாக எழுந்து, "இந்த போட்டோ வேணாம் சார்" என்றார்.
"ஏன்யா வேணாம்?"
"ப்ளீஸ் சார் வேணாம்." அழுதே விட்டார்.
"அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்? ரொம்ப கொடுரமா இருக்கா?"
"இல்ல சார். அது என் பையன் சார்...... "

Subscribe to:
Posts (Atom)