காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வாளர்களுக்கு அவசர கடிதம் வந்தது. அது தாங்கி வந்த செய்தி "நகரில் பெருகி வரும் வாகன விபத்துகளை குறைக்க ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்". அனைவரும் அது சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வாளர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை, வேறு வேறு எண்ணங்கள்.. "இது மாதிரி 1000 மீட்டிங் போட்டாச்சு. நோ யூஸ்", "நம்ம ஏரியால தான் ஆக்ஸிடன்ட் நிறைய நடந்துருக்கு, என்ன ஆகுமோ", "டிரங்கன் டிரைவ் பிடிக்காம விட்டோமே, அத கேட்பாரோ?" "ஒருவேளை ஹெல்மெட் போடுறத ஸ்ட்ரிக்ட் பண்ண போறாரோ?" "மீட்டிங் முடிஞ்ச உடனே சாப்பாடு இருக்குமா?" அந்த இடமே mind voice-ன் இரைச்சலால் நிரம்பி நிசப்தமாய் இருந்தது. ஆணையாளர் நுழையும் போதே அனைவரின் எண்ண ஓட்டத்தையும் ஊகித்துக் கொண்டே வந்தார்.
" ஆக்சிடன்ட் குறைய நீங்க நினைக்குற மாதிரி ஹெல்மெட் போடுறது, டிரங்கன் டிரைவ் பிடிக்குறது, இதெல்லாம் பழசு. ஏற்கனவே ட்ரை பண்ணி பெருசா எதுவும் ரிசல்ட் இல்ல. இப்போ புதுசா ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்?"
ஆய்வாளர்களிடம் நீண்ட மௌனம். சிறிது தயக்கத்திற்குப் பிறகு ஒருவர் "சார், எல்லா இடத்துலயும் செக்கிங் ஸ்ட்ரிக்ட் பண்ணலாம் சார். பைன் நிறைய போடலாம்."
ஆணையாளர் சிரித்து விட்டார். "ஹா ஹா ஹா. எங்க வர்றீங்கனு புரியுது. இது எலெக்சன் டைம். அப்படி பண்ண வேணாம்னு மேலிட உத்தரவு." அதற்கு அடுத்து யாரும் வாயை திறக்கவில்லை.
"ஒ.கே. நானே ஒரு ஐடியா சொல்றேன்." ஆணையாளர் தொடர்ந்தார். "ஒரு விபத்த பாத்த கொஞ்ச நேரத்துக்கு கவனமா ஓட்டுறது மனித இயல்பு. அதுனால சிட்டில முக்கியமான இடங்கள்ல எல்லார் கண்ணுலயும் படுற மாதிரி ஏற்கனவே நடந்த விபத்துகளோட போட்டோஸ் பெருசா வைப்போம். இது மக்களுக்கும் தொந்தரவு இல்ல. ஒரு புது முயற்சியா இருக்கும்."
"நம்ம வைக்குற போட்டோ கொடூரமா இருக்கணும். அத பாத்துட்டு யாரும் வேகமா போகவே கூடாது. இங்க இருக்குற போட்டோஸ்ல ஒன்ன செலக்ட் பண்ணுங்க. இதெல்லாம் சிட்டில போன வருஷம் நடந்த விபத்துகளில் எடுக்கப்பட்ட்டது ."
அனைவரும் ஒருமனதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தனர். லாரி சக்கரத்தின் கீழ் தலை நசுங்கி இறந்த ஒருவனுடைய போட்டோ. அவன் வந்த பைக் உருக்குலைந்து அருகில் கிடந்தது. பார்க்கவே கொடூரமாக இருந்தது.
"இந்த போட்டோ எல்லாருக்கும் ஒ.கே தான? சிட்டிக்கு உள்ள டிரைவ் பண்ற யாரும் இந்த போட்டோவ பாக்காம போக கூடாது. பாக்குற யாரும் டிரைவ் பண்ண பயப்படனும். அப்படி எல்லா இடத்துலயும் இத பெருசா வைங்க" ஆணையாளர் அவருக்கே உரிய கட்டை குரலில் கூறினார்.
இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மட்டும் மெதுவாக எழுந்து, "இந்த போட்டோ வேணாம் சார்" என்றார்.
"ஏன்யா வேணாம்?"
"ப்ளீஸ் சார் வேணாம்." அழுதே விட்டார்.
"அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்? ரொம்ப கொடுரமா இருக்கா?"
"இல்ல சார். அது என் பையன் சார்...... "
வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Saturday, August 28, 2010
Wednesday, August 18, 2010
சுகரும் ஃபிகரும் பாகம் - 2
கையில் கொஞ்சம் காசு சேர்ந்தாலே மனித மூளையை நாய் நக்கிவிடும் போல.(காசு இல்லனா மனுசனே நாய் மாதிரி தான் அது வேறுவிஷயம்). நாலு நோட்ட ஒன்னாப் பாத்த உடனே, "பாருக்கு போலாமா, பப் க்கு போலாமா, இல்ல வேற எங்கயும் போலாமா, இதப் பண்ணலாமா, அதப் பண்ணலாமா" என்று தோன்றும். இந்த மாதிரி பசங்க கெட்டு போகக் கூடாது அப்படிங்கிற நல்ல எண்ணத்தில் பரிமாண வளர்ச்சியில் உருவானவங்க தான் "ஃபிகரு" (வால்பையன் சார் அப்படியா?) எவ்வளவு சம்பாரிச்சாலும் அவங்களுக்கு செலவு பண்ணவே பத்தாது.இதுல எங்க பாருக்கு போக? கல்யாணம் ஆனவங்க நிலைமை இன்னும் மோசம். காலையில் பெட்ரோல் காசுக்கு அம்மணிட்ட தான் நிற்க வேண்டும்.
வாழ்க்கைக்குப் பணம் எப்படியோ அப்படித்தான் உடலுக்கு குளுக்கோஸ். வாழ்க்கையை உடலாகவும், பணத்தை குளுக்கோஸாகவும் உருவகப்படுத்திப் புரிந்து கொண்டால், "டயாபடீஸ் பில்டிங்கின் பேஸ்மட்டத்தில் முதல் பில்லரை ஸ்ட்ராங்காக" ஊன்றிவிடலாம்.
அப்ப ஃபிகரு இன்சுலினா?
- ஆமா. கரெக்ட். அவங்க தான் இன்சுலின்.(இங்க பார்டா. அதுக்குள்ள ரெண்டாவது பில்லர்)
ஆதி காலத்தில், மனிதன் வேட்டையாடித் திரிந்த போது அடுத்த வேலை உணவிற்கு நிச்சயமில்லாத நிலை. (அப்ப ரெண்டு ருவா அரிசிலாம் இல்லயா?) எப்பவாவது கிடைக்கும் உணவை வைத்து பொழுதை ஓட்ட வேண்டிய கட்டாயம். அதற்கு நம் கதையில் வருவது போல, மாரிக்கண்ணுக்கு பணத்தை அவனது மனைவி நிர்வகிப்பது போல, கிடைக்கும் குளுக்கோஸை ஒழுங்காக சேமித்து தேவைப்படும் போது பயன்படுத்த ஒர் அமைப்பு தேவைப்பட்டது., குளுக்கோஸை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பல ஹார்மோன்கள் இருந்தன. அவற்றுள், தேவைக்கு அதிகமான குளுக்கோஸை சேமிக்கும் பொறுப்பு இன்சுலினிடம் கொடுக்கப்பட்டது. (குளுக்கோஸை மீட்டு, எடுத்துக் கொடுக்கும் பொறுப்புக்கு வேறு ஹார்மோன்கள்) சனிக்கிழமை வாங்கும் சம்பளத்தை வைத்து, அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்துவதைப் போல, ஒருமுறை உணவு உண்ட பின் கிடைக்கும் குளுக்கோஸை வைத்து அடுத்து உணவு கிடைக்கும் வரை உடலை இயக்க இவை கற்றுக்கொண்டன.
இதில் ஒரு கொடுமை என்னனா, சாப்பிட்ட உடனே இரத்ததில் ஏறுகிற குளுக்கோஸ், பாருக்கு போறப்ப மாரிக்கண்ணு கைல இருக்க பணம் மாதிரி. உடனே செலவும் ஆயிடும், உடம்புக்கும் கெடுதி. எல்லா பணமும் (குளுக்கோஸ்) செலவாயிட்டா, அப்ப அடுத்த வாரம் வரை குடும்பம் நடத்த......? சுருக்கமா சொன்னா, இரத்ததில் உள்ள குளுக்கோஸ் குடிகாரன் கையில் உள்ள பணம் மாதிரி. உடனே பத்திரப்படுத்தணும். இல்லனா ஆப்பு தான்
குளுக்கோஸ் - பணம்
இரத்தத்தில் குளுக்கோஸ்- குடிகாரன் கையில் பணம்.
அப்புறம் எதுக்கு குடிகாரன் கையில பணம் அத புடுங்கிருங்க பா. புடுங்கிடலாமா??
அடுத்த பாகத்தில்.... .
டிஸ்கி: சந்தேகங்களையும், கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க நட்புகளே.. மறக்காம ஓட்டையும் போட்டுருங்க.
லேபிள்கள்:
disease series,
sugar and figure
Tuesday, August 17, 2010
சுகரும் ஃபிகரும் பாகம் - 1
படிச்சவங்களுக்கு சுகர், பாட்டிகளுக்கு சக்கர வியாதி, பீட்ட்ரு விட நெனச்சா டயாபடீஸ், இப்படி நிறைய பெயர்களில் நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட வியாதி சுகர் என்ற டயாபடீஸ் என்ற சர்க்கரை வியாதி. இப்போதெல்லாம் இது அந்தஸ்தின் அடையாளம். பொது இடங்களில் "சுகர் கம்மியா போடுங்க, எனக்கு டயாபடீஸ்" என்று சொல்வதை பெருமையாகவே நினைக்கிறார்கள்.
அது சரிப்பா, சுகருக்கும் ஃபிகருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கே... சம்பந்தம் இருக்கே..
ரெண்டுமே பெரிய தொல்லை. ஆனா கூட இருந்தா ஒரு வெட்டி பெருமை.
சுகரும் சரி ஃபிகரும் சரி பர்ஸ்க்கு பாம் வைக்குறதுல கில்லாடிங்க.
ரெண்டுமே வாய் கொழுப்புல நமக்கு நாமே வச்சுகிற சூன்யம். (இங்க பார்டா சிலேடைய)
சுகரு வந்தா மெடிக்கல் ஷாப்
ஃபிகரு போனா ஒயின்ஷாப்.
ஆனா ஒரு விசயத்துல சுகர நம்பலாம். நம்மவிட்டு ஃபிகர் போனாலும் சுகர் போகாது.
சுகர் பத்தி சப்ஜெக்ட்க்கே வராம 20 பக்கம் பேசலாம். ஆனா சுகர்னா என்ன? சுகர் வந்தா கட்டாயம் மாத்திரை சாப்பிடணுமா? இட்லி சாப்பிட்டா நல்லதா? சப்பாத்தி சாப்பிட்டா நல்லதா? எத்தனை சாப்பிடலாம்? இன்சுலின் எப்பப் போடணும்? ... இந்த மாதிரி எக்கச்சக்க கேள்விகள் நம்ம கிட்ட இருக்கு. ஃபிகர பத்தி தெரிந்த அளவுக்கு சுகர பத்தி தெரியல. நம்மில் நிறைய பேருக்கு மருத்துவ அறிவில் "'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் வீக்கு."
பேஸ்மட்டத்தில் இருந்து டயாபடீஸ் பத்தி முழுமையாக விளக்குகிற தொடராக இதை ஆரம்பித்துள்ளேன். பொறுமையாக படித்தால் நிச்சயம் டயாபடீஸ் பற்றிய புரிதல் அதிகமாகும்.
சர்க்கரை வியாதி என்பது நம் உடலில் உணவு சேமிப்பதில் உள்ள குறைபாடு (storage disorder) - இப்படிலாம் சொன்னா ஏதோ 12வது பயாலஜி புக் வாசிக்கிற ஃபீலிங் வந்துரும். ஸ்டோரேஜ் டிஸார்டர்க்குள் போகும் முன் ஒரு சிறிய கதை, புரிதலுக்காக.
மாரிக்கண்ணுக்குக் கொத்தனார் வேலை. வாரச் சம்பளம். அவனோட காண்ட்ராக்டர் ரொம்ப நல்லவர். சனிக்கிழமை கரெக்ட்டா சம்பளம் தந்துருவார். மாரிக்கண்ணுக்கு ஒரு கெட்ட பழக்கம். கைல 180 ருவாய்க்கு மேல இருந்தா, எவ்வளோ காசு இருந்தாலும் டாஸ்மாக் பார்க்கு போயி காலியாக்கி விடுவான். கொஞ்ச நேரத்தில பாத்ரூம் போனா எல்லா காசும் தண்ணியா போய்டும். ஆனா ஒரு நல்ல பழக்கம் 180க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த பக்கம் போக மாட்டான்.(அதென்ன ஒரு கணக்கு 180? பிறகு சொல்றேன்). அதனால சம்பளம் வந்த உடனே எல்லா பணத்தயும் வீட்டுக்காரம்மாட்ட(ஹவுஸ் ஒனர் இல்லிங்க) கொடுத்துடுவான். அவங்க கொஞ்சம் பொறுப்பான குடும்ப தலைவி. அஞ்சறை பெட்டில கொஞ்சம், அலமாரில கொஞ்சம்னு எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைப்பாங்க.அப்பப்ப செலவுக்கு எடுத்துகுவாங்க. வாரத்தில ஒருநாள் மட்டும் சம்பளம் வந்தாலும் அத வச்சு முழுவாரத்தையும் பிரச்சனையில்லாம சமாளிச்சாங்க. .
என்னமோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு? அதுசரி இந்த கதைக்கும் டயாபடீஸ்க்கும் என்ன தொடர்பு? அடுத்த பாகம்.....

Sunday, August 15, 2010
உரிமைக்குப் போராடிய கருப்பையா
பயிற்சி மருத்துவராக சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த போது நடந்த நிகழ்ச்சி. காலை எட்டு மணி இருக்கும். அமைதியாக வரிசையில் வந்தார் அந்த நபர். மேஜையைச் சுற்றி நான்கு பேர் அமர்ந்திருந்த எங்கள் மருத்துவக் குழுவில் மற்ற மருத்துவர்களிடம் நோயாளிகள் இருந்ததால் என்னிடம் வர வேண்டிய நிலை அவருக்கு. அந்த PHC யிலேயே பணிபுரியும் மருத்துவ அலுவலரை பார்த்த படியே என்னிடம் வந்தார். அவரது பார்வையிலேயே என் மீது அவருக்கு இருந்த (அவ)நம்பிக்கை! புரிந்துவிட்டது.
நமக்கு தான் ஆர்வக் கோளாறு அதிகமாச்சே. "இவர் திரும்ப இந்த PHCக்கு வந்தா நம்ம கிட்ட தான் வரணும். அந்த அளவு இவர சூப்பரா ட்ரீட் பண்ணனும்"னு முடிவு பண்ணிட்டேன். அவர் கையில இருந்த சீட்டை வாங்கினேன். கருப்பையா, வயது 40 என்று எழுதி இருந்தது. ஆனால் ஆளைப் பார்த்தால் 60 க்கும் அதிகமாகவே சொல்லலாம். பொதுவாக கிராமத்து ஆட்கள் சொல்லும் வயதிற்கும் அவர்களைப் பார்த்தால் நாம் நினைக்கும் வயதிற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் சொல்லல்லாம். வெயிலில் அலைந்து திரியும் வேலை, சரியான பராமரிப்பு இன்மை.... நிறைய பேருக்கு பிறந்த வருடமே தெரியாது. குத்து மதிப்பாக ஒரு வருடம் வைத்து வயதைச் சொல்வார்கள். ஒரு ஆவரேஜா இவருக்கு 50 வச்சுக்கலாம்.
" அய்யா உங்களுக்கு என்ன தொந்தரவு?"
" கொஞ்ச நாளாவே உடம்பு சரி இல்ல சார்"
- இந்த மாதிரி Non specific complaints நிறைய பார்த்திருப்பதால் கேள்விய கொஞ்சம் திருப்பி போட்டேன்.
"சரிங்க அய்யா, என்ன பண்ணுது?"
"ரொம்ப தளர்ச்சியா இருக்கு சார். திடீர் திடீர்னு கால் வீங்குது. வேலையே பாக்க முடியல. எப்ப பாத்தாலும் படுக்கணும் போலவே இருக்கு சார்"
வழக்கமான பரிசோதனை செய்ததில் அவருக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தது. இந்த "Undiagnosed hypertension" எந்த எந்த உறுப்புகளை பாதித்து உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.
"அய்யா உங்களுக்கு பிரஷர் இருக்க மாதிரி இருக்கு. இந்த இரத்த டெஸ்ட் பண்ணுனிங்கனா முழுக்க தெரிஞ்சுரும்"
இரத்த அழுத்தத்தின் கூடா நட்பு டயாபட்டிஸ் கண்டுபிடிக்க இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய இரத்த யுரியா, கிரியாடினின் அளவுகளுக்கு குறித்து அவரிடம் அந்த சீட்டை தந்து,
"அய்யா, இப்படியே நேர போயி இடது பக்கம் வளைஞ்சா Lab வரும். அங்க இந்த டெஸ்ட் பண்ணிட்டு வரிங்களா?"
அவருக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை போல. இதெல்லாம் கட்டாயம் பண்ணனுமா என்பது போல பார்த்தார்.
"எல்லாமே free தாங்க. காசுலாம் இல்ல. சும்மா பண்ணிட்டு வாங்க."
வேண்டா வெறுப்பாக சென்றார். அருகில் இருந்த மருத்துவர்கள் எல்லாம் "ஒரே patient-a வச்சு டைம் ஓட்டுறான்டா இவன்" என்று முறைத்தனர். அதை கண்டுக்காதது போல அடுத்த நபரைப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து கருப்பையா வந்தார். கையில் டெஸ்ட் ரிசல்ட். நேர மற்றொரு மருத்துவரிடம் சென்றார். அவர் என்னிடம் போகும்படி கைகாட்ட வேறு வழியின்றி என்னிடம் வந்தார்.
நல்லவேளை இரத்த சர்க்கரை அளவு நார்மல். கிரியாடினின் மட்டும் சராசரியை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் கவலை இல்லை. இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்தால் போதும். சிறுநீரகத்தை பாதிப்பு இன்றி காப்பாற்றிவிடலாம்.
"அய்யா, உங்களுக்கு பிரசர் அதிகமா இருக்கு. அதன் தளர்ச்சி வருது. பிரசர் மாத்திரை சாப்பிடிங்கனா குறைஞ்சுரும். ஒன்னும் பிரச்சனை இல்ல. மாத்திரையை மட்டும் விடாம சாப்புடுங்க. திங்கள் கிழமை வாராவாரம் வந்து வாங்கிகோங்க"
உயர் இரத்த அழுத்த மாத்திரைகளை குறித்து கொடுத்தேன். ஒரு திருப்தி எனக்கு. Non specific complaints உள்ள ஒருவரை சோதித்து, காரணத்தைக் கண்டறிந்து அதையும் investigate பண்ணி சரியான சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட சந்தோசம்.
கருப்பையா எதோ கேட்க நினைப்பது போல் நின்று கொண்டு இருந்தார். அப்போது தான் எனக்கு உணவு முறைகளை விளக்காமல் விட்டது ஞாபகம் வந்தது.
"உப்பு மட்டும் குறைச்சுடுங்க. அரை உப்பு, கால் உப்பு போதும். கறி, மீனு, கோழிலாம் எப்பவாது சாப்டுக்கலாம். ஊறுகாய், அப்பளம் வேணாம். எண்ணெய், கொழுப்பு, மசாலா அயிட்டம் வேணாம். "
கருப்பையாக்கு இன்னும் திருப்தி வரவில்லை.
"ஊசி இல்லையா சார்?"
எனக்கு தெரிந்து உயர் இரத்த அழுத்ததிற்கு மாத்திரை தான். அவசர சிகிச்சையின் போது உடனடியாக குறைக்க வேண்டிய இடங்களில் மட்டும் தான் ஊசி மருந்து பயன்படும். இவருக்கு அது தேவை இல்லையே.
"ஊசிலாம் வேணாம் அய்யா. இந்த மாத்திரை சாப்பிட்டாலே போதும்"
"பரவாயில்லை சார். சும்மா ஒரு ஊசி போட்டுக்கிறேன். அப்ப தான் சரி ஆகும்."
"அய்யா உங்களுக்கு இருக்குறது பிரசர். ஒரு ஊசி போட்டா சரி ஆயிடாது. டெய்லி மாத்திரை சாப்பிடனும்."
"இல்ல சார் ஒரே ஒரு ஊசியாவது போடுங்க"
அருகில் இருக்கும் மருத்துவர்கள் முறைக்க ஆரம்பித்தனர். வெளியில் 300 பேருக்கு மேல நோயாளிகள் நிற்கின்றனர். காலை 11 மணிக்கு முன்பு அனைவரயும் பார்க்க வேண்டும். நான் பார்க்கும் வேகத்தில் பார்த்தால் ராத்திரி 11 மணிக்கு கூட பார்த்து முடிக்க முடியாது. மருத்துவ அலுவலர் "கொஞ்சம் வேகமா பாருங்க டாக்டர்" என்றார்.
வேற வழி இல்லை. மருத்துவ அலுவலரிடமே கேட்டேன். "Sir one hypertensive patient, wants injection. what to do sir?" (உயர் இரத்த அழுத்த நோயாளி ஊசி கேட்கிறார். என்ன செய்ய சார்?)
அனுபவம்னா சும்மாவா? உடனே அவர் "prescribe inj.vitB12 doctor" (B12 வைட்டமின் ஊசியை எழுதுங்க டாக்டர்) . ஆஹா இந்த ஐடியா நம்ம கிட்ட இல்லையே. உடனே கருப்பையாக்கு inj.vitB12 குறித்து கொடுத்தேன்.
"அய்யா, இந்த ஊசிய போட்டுகோங்க. அப்புறம் இந்த மாத்திரைய மறக்காம சாப்டுங்க."
கருப்பையா முகத்தில் இப்போது தான் சந்தோசம்.
'சரிங்க சார்" ஒருவழியாக கிளம்பி விட்டார். அப்பாடா!!!.
கருப்பையாவுடன் மல்லுக்கட்டி பொழுதை ஓட்டியதால் எனக்கு தர வேண்டிய தேநீரை தரவில்லை நம்ம நண்பர்கள்.கேட்டால் கெட்ட வார்த்தையில் திட்டுவார்களோ என்று பயம் வேற. தண்ணீராவது குடிக்கலாம் என்று ரெஸ்ட் ரூம்க்கு கிளம்பினேன். வழியில் ஊசி போடும் அறையில் கருப்பையாவின் குரல் சத்தமாக கேட்டுக்கொண்டு இருந்தது.
"கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க."
எனக்கு பகீரென்றது. அடப்பாவி hypertension tableta காய்ச்சல் தலைவலிக்கு போடப் போறிங்களா? நீங்க போட்டாலும் பரவாயில்ல மத்தவங்களுக்கும் கொடுப்பிங்களே! (கவர்மென்ட் ஆஸ்பத்திரில வாங்குன இலவச மாத்திரையை கொடுத்து தான் நிறைய பேர் தங்கள் வள்ளல் தன்மையை வெளிப்படுத்துவர்.) காலைல இருந்து கஷ்டப்பட்டு diagnose பண்ணுனா ஒரு விட்டமின் ஊசி போதும்னு சொல்றாரே.
மருத்துவ அலுவலரிடம் சொன்னேன். அவரோ ரொம்ப கூலா "உனக்கு இது புதுசு. மெயின் ரோடுக்கு போற வழில ரயில்வே டிராக் தாண்டி பாரு. நம்ம குடுத்த மாத்திரைலாம் கிடக்கும். போற வழில தூக்கி போட்ருவாங்க. அவங்களுக்கு தேவை ஊசி தான். மாத்திரைய வேற வழி இல்லாம வாங்குறாங்க. ஊசி அவங்க உரிமை. அதுவும் சிபாரிசோட வந்தா ரெண்டு ஊசி போட்டா தான் போவாங்க," என்று சிரித்தார். அதன்பிறகு கருப்பையாவைத் தனியே அழைத்து மண்டகப்படி நடத்தியது தனி கதை.
என்ன இருந்தாலும் நம் மக்களின் அறியாமையை நினைக்கும் போது பாவமாக தான் இருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)