வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

வாழ்க்கைப் பெருங்கடலின் எண்ண அலைகள், பதிவுகளாக....

Thursday, November 18, 2010

நான் போகிறேன் மேலே மேலே....

     சமீபத்தில் நண்பர் பிரபாகரன் அவர்களது கனவு பற்றிய பதிவில் நண்பர் எஸ்.கே அவர்கள் அழகாக விளக்கம் அளித்து அசத்தியிருந்தார்.  அதன் பின்னூட்டத்தில் எனது கனவிற்கும் விளக்கம் அளிக்க முடியுமா எனக் கேட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக என் கனவை விளக்குகிறேன்..

                இந்த கனவு கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் ஏறத்தாழ இருபது முறைக்கு மேல் வந்திருக்கும். இது, இந்த கனவு மட்டும் தனியாக வந்த கணக்கு. அதேபோல சில நீளமான கனவுகளில் ஒரு பகுதியாக இதே கனவு கணக்கற்ற முறையில் வந்துள்ளது. மற்ற கனவுகளைப் போல காலையில் எழுந்தவுடன் இந்த கனவு மறந்துவிடுவது இல்லை. நீளமான கனவுகளிலும் மற்றப் பகுதிகள் மறந்துவிட்டாலும் இந்தப் பகுதி மட்டும் மறக்காது. அந்தக் கனவு,.                     ஒரு பெரிய புல்வெளி. எங்கும் பச்சை. கண்ணுக்கெட்டும் தூரம் வரை கட்டிடமோ வேறு பொருட்களோ இல்லை. எல்லா திசைகளிலும் தொடுவானம் வரை மைதானம் பரந்து விரிந்து இருக்கிறது. நான் மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறேன். பின்னால் இருந்து ஒரு குரல் "வேகமாக வேகமாக" என உற்சாகம் கொடுக்க, ஓட ஆரம்பிக்கிறேன். ஒரு காலை தரையில் வைத்து அழுத்தி   எம்பிக் குதித்து லாங் ஜம்ப் தாண்டுவது போல, மறுகாலை வெகுதூரத்தில் வைக்கிறேன். அதேபோல அந்தக் காலையும் வைத்து அழுத்தி லாங் ஜம்ப் தாண்டி   ஓடுகிறேன்.  ஒரு ஸ்டெப்க்கும்  இன்னொரு  ஸ்டெப்க்கும் இடையிலான இடைவெளி சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. கொஞ்ச  நேரத்தில் ஒரு அடிக்கும் மற்றொரு அடிக்கும் இடையில் பத்து, இருபது மீட்டர் தூரம் வரை செல்கிறது. இதைப் பார்த்த உடன்  இன்னும்   வேகமாக ஓடுகிறேன், காலை வெகு அழுத்தமாக தரையில் வைத்து அதிக விசையுடன் தாவுகிறேன். சிறிது நேரத்தில் கால் தரையில் படவே இல்லை. காற்றிலே ஓடுகிறேன். பறப்பது போல. ஆனாலும் காலை அசைப்பதை நிறுத்தவில்லை. கிட்டதட்ட ஒரு ஏரோப்ளேன் டேக் ஆப் ஆவது போல இருக்கிறது இந்த நிகழ்வு. காற்றிலும் ஓடுவது போல காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறேன். பறந்தது போதும் என்று நினைக்கும் போது காலை ஆட்டுவதை நிறுத்துகிறேன். தரைக்கு வந்துவிடுகிறேன். தரைக்கு வந்த உடன் விழிப்பு   வந்துவிடும்.    இக்கனவு பலமுறை வந்திருப்பதால் துல்லியமாக நியாபகத்தில் இருக்கிறது. விழிப்பு வந்த உடன் பறந்து விட்டு வந்த ஒரு சுகமான பீலிங் இருக்கும். கனவு போலவே தோன்றாது. நிஜத்திலேயே பறந்தது போல இருக்கும். கனவிலேயே இவ்வளவு தூரமாக தாண்டுகிறோம், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டால் பதக்கம் நிச்சயம் போன்ற எண்ணங்கள் தோன்றும்.

   இதே கனவு மற்ற கனவுகளில் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. கனவில் ஆபத்து ஏற்படும் நேரங்களில் இது போல ஓடி தப்பித்து இருக்கிறேன். அதே போல இன்னும் நிறைய கனவுகளில் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. சிலநேரங்களில்  மைதானத்திற்கு பதில் நீண்ட சாலை, பின்னால் கேட்கும் குரல் தெரிந்த நபராக இருக்கும். கனவு முடிந்து விழிப்பு வரும் போது தான் உடல் எடையை உணர்வேன்.

           இதுக்கு என்ன தாங்க மீனிங்? ஏன் இதே கனவு தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே மாதிரி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது?

   டிஸ்கி: என் கனவிற்கு ஏற்ற படங்கள் கிடைக்கவில்லை. ஓரளவிற்கு ஒத்து வந்த படங்களை சேர்த்திருக்கிறேன்.
                 

                      

21 comments:

Anonymous said...

ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரை அணுகினால் நல்லது என நினைக்கிறேன்.

*** காசு கொடுக்காமல் ஓடிவிடலாம்... ஹி ஹி...

அலைகள் பாலா said...

ayyo. kaasulaam kodupenga..

மொக்கராசா said...

நைனா ஒரு ஃபுல் அடிச்சு கவுந்திருந்தேன இந்த மாதிரி கனவெல்லாம் வராது ......

அலைகள் பாலா said...

@மொக்கராசா said...

inime atha thaan boss try pannanum

கவிதை காதலன் said...

நீங்க ரொம்ப உயரத்திற்கு போகப்போறீங்கன்றதை குறிக்கிறதுக்காக சிம்பாலிக்கா வருதோ???

கவிதை காதலன் said...

முதல் முறை உங்கள் அலையில் நனைகிறேன். இனி தொடர்ந்து நனைவேன்.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுக்கு ஏற்ற டைட்டில்.மேட்டர் சூப்பர்.கவிதைக்காதலன் சொன்ன மேட்டர்கள் 2லும் என் பேரும் போட்டுக்கொள்ளவும்

எஸ்.கே said...

நண்பருக்கு வணக்கம்!
என்னால் இயன்ற அளவு தங்கள் கனவிற்கு விளக்கமளிக்கிறேன். ஓரளவிற்காவது ஒத்துப்போகிறதா என கூறவும். நன்றி!

பச்சை புல்வெளி கனவில் வருவது எப்போதும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான இடத்தில் இருப்பதை/இருக்க விரும்புவதை குறிக்கிறது. மேலும் புதிய வளர்ச்சி மற்றும் வெற்றியை குறிக்கிறது. இக்கனவில் ஒரு விளையாட்டு போட்டியின் சூழல் நிலவுகிறது. இது உயர்ந்தபட்ச வெற்றியை நீங்கள் அடைய விரும்புவதை குறிக்கிறது. கனவில் கேட்கும் குரல்- உங்கள் ஆழ்மனம் உங்களை முன்னேற சொல்கிறது. நீங்கள் ஒரு அதிகமான வெற்றியை பெற விரும்புகிறீர்கள். ஒரு கட்டத்தில் உயரம் போதுமென நீங்கள் தரைக்கு வருகிறீர்கள். அதாவது அதுவே உங்களுக்கு போதும் என நினைக்கிறீர்கள். இக்கனவு பல வருடங்களாக வருவதால் அது இன்னும் நிகவில்லை என்பது தெரிகிறது.

மேலும் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றங்களை விரும்புவதையும் இக்கனவு குறிக்கிறது. அம்மாற்றங்கள் நீங்கள் விரும்பியபடி இதுவரை முழுமையாக நடக்கவில்லை என தெரிகிறது.

கனவில் நீங்கள் மட்டுமே வருகிறீர்கள் என நினைக்கிறேன். எனவே இக்கனவு முழுமையாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே குறிக்கிறது.

அருண் பிரசாத் said...

Applause S K

நல்ல விளக்கம்

ஜாக்கி சேகர் said...

தம்பி இதுமாதிரி கனவுதான் வருதா? எனக்கு ரொம்ப நாளா சிம்ரன் மன்ம் விரும்புதே உன்னை உன்னை ன்னு என்னை பார்த்து கை நீட்டி பாடுறா மாதிரி கனவு வந்துகிட்டு இருந்தது.,.சிம்ரன் கல்யாண பேச்சை எடுத்ததும் கொஞ்சம் கொஞ்சமா நின்னுடுத்து.. வீட்ல சொன்ன சோறு கிடைக்காதுன்னு இங்க சொல்லறேன்.

தீயஷக்தி... said...

:-)

THOPPITHOPPI said...

"நான் போகிறேன் மேலே மேலே...."

இது உங்களுக்கு பிடித்த பாடலின் முதல் வரியோ ?

கே.ஆர்.பி.செந்தில் said...

அது ஏன் கனவுல மட்டும் நம்மால வேகமா ஓட முடியறது இல்ல...

அலைகள் பாலா said...

//முதல் முறை உங்கள் அலையில் நனைகிறேன். இனி தொடர்ந்து நனைவேன்//

நன்றி நண்பரே.. தொடர்ந்து வாருங்கள்.

அலைகள் பாலா said...

//பதிவுக்கு ஏற்ற டைட்டில்.மேட்டர் சூப்பர்.கவிதைக்காதலன் சொன்ன மேட்டர்கள் 2லும் என் பேரும் போட்டுக்கொள்ளவும்///

போட்டாச்சு cps

அலைகள் பாலா said...

// எஸ்.கே said...
நண்பருக்கு வணக்கம்!
என்னால் இயன்ற அளவு தங்கள் கனவிற்கு விளக்கமளிக்கிறேன். ஓரளவிற்காவது ஒத்துப்போகிறதா என கூறவும். நன்றி!

///

மிகுந்த நன்றி எஸ்.கே தனி பதிவாக எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்

அலைகள் பாலா said...

@@ ஜாக்கி சேகர் said...
தம்பி இதுமாதிரி கனவுதான் வருதா? எனக்கு ரொம்ப நாளா சிம்ரன் மன்ம் விரும்புதே உன்னை உன்னை ன்னு என்னை பார்த்து கை நீட்டி பாடுறா மாதிரி கனவு வந்துகிட்டு இருந்தது.,.சிம்ரன் கல்யாண பேச்சை எடுத்ததும் கொஞ்சம் கொஞ்சமா நின்னுடுத்து.. வீட்ல சொன்ன சோறு கிடைக்காதுன்னு இங்க சொல்லறேன்.//

ஹா ஹா ஹா. அண்ணன மாட்டி விட ஒரு பாயின்ட் கிடைச்சுருச்சு

அலைகள் பாலா said...

அருண் பிரசாத் said...
Applause S K

நல்ல விளக்கம்
///

அதே அதே

அலைகள் பாலா said...

தீயஷக்தி... said...
:-)
வருகைக்கு நன்றி நண்பரே

அலைகள் பாலா said...

///நான் போகிறேன் மேலே மேலே...."

இது உங்களுக்கு பிடித்த பாடலின் முதல் வரியோ ?///

இப்ப சில நாளா பிடிக்குது

அலைகள் பாலா said...

/// கே.ஆர்.பி.செந்தில் said...
அது ஏன் கனவுல மட்டும் நம்மால வேகமா ஓட முடியறது இல்ல...
//

நான் ஓடினேனே...